Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நியாயம்.. அடுத்த போட்டியிலும் ஆடவில்லை.. ராயுடுவால் சிஎஸ்கேவில் குழப்பம்.. சிக்கலில் தோனி!

அபுதாபி: சென்னை அணியின் முன்னணி வீரர் அம்பதி ராயுடு அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுவதால், அவரின் இடத்தில் யார் விளையாடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

சென்னை அணியில் ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே குழப்பங்கள், திருப்பங்கள் நடந்து வருகிறது. முதலில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன் சென்னை அணியில் இருந்து ரெய்னா வெளியேறினார்.

குடும்ப பிரச்சனை காரணமாகவும், உறவினர்கள் கொள்ளையர்கள் மூலம் கொல்லப்பட்ட காரணத்தாலும் ரெய்னா இந்தியாவிற்கு திரும்பினார். அதன்பின் ஹர்பஜன் அணியில் இருந்து வெளியேறினார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த நிலையில்தான் சென்னை அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் இருக்கிற வீரர்களை வைத்து வெற்றிபெற்றது. ரெய்னா இல்லை என்றாலும் அம்பதி ராயுடு, டு பிளசிஸ் சென்னை அணியை காப்பாற்றினார்கள். ஆனால் அதற்கு அடுத்து ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராயுடு விளையாடவில்லை. இந்த போட்டியில் சென்னையும் தோல்வி அடைந்தது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

அம்பதி ராயுடுவிற்கு கையில் சின்ன காயம் மற்றும் முதுகு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த போட்டியிலும் இவர் விளையாட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இவர் இன்னும் முழுமையான உடல் தகுதியை பெறவில்லை. இதனால் இவர் அடுத்த போட்டியிலும் ஆட வாய்ப்பில்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இதனால் சென்னை அணி அடுத்த போட்டியில் என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது. அம்பதி ராயுடு இடத்தில் யார் ஆடுவார் என்று கேள்வி எழுந்து இருக்கிறது. ராயுடுவிற்கு மாற்றாக வந்த ருதுராஜ் சரியாக ஆடவில்லை என்பதால் அவர் அணியில் நீடிப்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு பதில் புதிய வீரர் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.

முக்கியமான வீரர்கள்

முக்கியமான வீரர்கள்

இந்த நிலையில் சென்னை அணியில் இப்படி முக்கியமான வீரர்கள் எல்லோரும் ஆடாமல் ஒதுங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் ரெய்னா அணியில் இருந்து விலகி சென்றார். அதன்பின் ஹர்பஜன் அணியில் இருந்து விலகினார். அதன்பின் அணியில் நல்ல பார்மில் இருந்து ராயுடுவும் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

என்ன செய்வது

என்ன செய்வது

இப்படி முக்கியமான வீரர்கள் எல்லாம் அணியில் இருந்து விலகினால் என்ன செய்வது? சிஎஸ்கே அணி நிர்வாகம் என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது. தோனியும் இருக்கிற வீரர்களை வைத்தே எப்படி ஆடுவார். அவர் மீது இருக்கும் பிரஷரில் இப்படி வீரர்கள் வெளியேறுவது எந்த விதத்தில் நியாயம் என்று பலர் டிவிட் செய்து வருகிறார்கள் . உடனடியாக சிஎஸ்கே நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Story first published: Thursday, September 24, 2020, 16:15 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+