நீண்ட நேரம் ஆலோசனை.. போட்டிக்கு பின் கெயிலை சந்தித்த தோனி.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேற்று பஞ்சாப் வீரர் கெயில் உடன் நீண்ட நேரம் பேசியது நிறைய சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணி உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஐபிஎல் போட்டிகளில் இதே வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் சிஎஸ்கே உள்ளது.
நேற்று பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி வெற்றிபெற்றது. நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே 181 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது.

என்ன நடந்தது
சென்னை அணியின் வெற்றிக்கு பின் நேற்று சிஎஸ்கே கேப்டன் தோனி பஞ்சாப் வீரர் கெயிலை சந்தித்தார். முதலில் இரண்டு அணி வீரர்களும் கை கொடுக்கும் போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போதே இவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்.

மீண்டும் மோதல்
அதன்பின் போட்டிக்கு பின் இளம் வீரர்களிடம் தோனி பேசினார். அதன்பின் கெயிலை சந்தித்த தோனி அவரிடம் பேசினார். நீண்ட நேரம் அவருடன் தோனி ஆலோசனை செய்தார். சிரித்தபடி இவர்கள் இருவரும் பேசிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

சென்னைக்கு வருகிறாரா
தற்போது சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருக்கிறது.கேதார் ஜாதவ் அணியில் மிக மோசமாக ஆடி வருகிறார். நேற்று போட்டியில் வாட்சன் நன்றாக ஆடியதால் ஜாதவ் தலை தப்பித்தது. விரைவில் ஜாதாவிற்கு சிஎஸ்கே மாற்று வீரரை தேடும் என்று கூறுகிறார்கள்.

காரணம்
இந்த நிலையில்தான் கெயில் உடன் தோனி சந்திப்பு நடத்தியதை வைத்து நிறைய யுகங்கள் வெளியானது. பஞ்சாப் அணியில் கெயிலுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. இனியும் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் சிஎஸ்கே அவரை அணிக்குள் எடுக்க பார்க்கிறதா? தோனி இதனால்தான் கெயில் உடன் பேசினாரா என்று கேள்விகள் எழுந்தது. பலரும் இது குறித்து தங்கள் யுகங்களை வெளியிட்டனர்.

என்ன பதில்
ஆனால் சிஎஸ்கே கெயிலை எடுக்கும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள். ஏற்கனவே நிறைய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர் என்பதால் சிஎஸ்கே கெயிலை எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள். மாறாக கெயிலுக்கு இதுதான் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும். இதனால்தான் தோனி அவருடன் பேசினார் என்கிறார்கள்.

நண்பர்கள்
இருவரும் நல்ல நண்பர்கள். பல வருடமாக நெறுக்கமாக இருந்துள்ளனர். இந்த தொடர் கெயிலுக்கு கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் தோனி அவரிடம் நீண்ட நேரம் பேசி இருப்பார் என்று கூறப்படுகிறது . இந்த ஐபிஎல் தொடருக்கு பின் கெயில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications