அப்படியே நின்னா என்ன அர்த்தம்.. மைதானத்தில் ஜாதவை சீண்டிய ஜடேஜா.. பதறிய சாம் கரன்.. பரபரப்பு சம்பவம்
துபாய்: நேற்று பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கேதார் ஜாதவ் - ஜடேஜா - சாம் கரன் இடையே நடந்த விவாதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியதன் மூலம் சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது. ஒரு விக்கெட் கூட விழாமல் பஞ்சாப்பை வீழ்த்தி சிஎஸ்கே தனது உண்மையான பலத்தை நிரூபித்து உள்ளது.
நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் 4 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே 181 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது. டு பிளசிஸ் - வாட்சன் ஜோடி பஞ்சாப் பவுலர்களை பாலைவனத்திற்கு பறக்கவிட்டு, சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்தனர்.

கோபம்
நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. ஜடேஜா, டு பிளசிஸ் மட்டுமே சரியாக பீல்டிங் செய்தனர். மாறாக ஜாதவ், பியூஸ் சாவ்லா போன்ற வீரர்கள் மிக மோசமாக பீல்டிங் செய்தனர். இதனால் தேவையில்லாத சில பவுண்டரிகள் சென்றது. பயிற்சியாளர் பிளமிங் கூட இதனால் கோபம் அடைந்தார்.

என்ன நடந்தது
இந்த போட்டியில் 16வது ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது சாம் கரன் பவுலிங் செய்தார். பஞ்சாப் சார்பாக கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரான் இருவரும் பேட்டிங் செய்து வந்தனர். பூரான்- ராகுல் இடையே பார்ட்னர்ஷிப் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிஎஸ்கே மீது அழுத்தம் அதிகரித்தது.

என்ன செய்தார்
அந்த ஓவரில் பூரான் டீப் கவர் திசையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அங்கு பீல்டர்கள் யாரும் இல்லை. மாறாக எக்ஸ்ட்ரா டீப் கவர் திசையில் ஜாதவ் இருந்தார். இவர் பந்தை வேகமாக ஓடி வந்து பிடித்தார். ஆனால் அதற்குள் பூரான் இரண்டு ரன்கள் ஓடி விட்டார். ஜாதவ் நினைத்து இருந்தால் ஒரு ரன்னில் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

வேகம் இல்லை
ஆனால் ஜாதவ் அவ்வளவு வேகமாக ஓடவில்லை. இதனால் பூரான் இரண்டு ரன்கள் எடுத்துவிட்டார். இதை பார்த்ததும் ஜடேஜா கடும் கோபத்திற்கு உள்ளானார். இப்படியே டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையிலேயே நின்றால் என்ன அர்த்தம். ஏன் இவ்வளவு மெதுவாக வந்தாய் என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதனால் கேதார் ஜாதவும் கோபம் அடைந்தார்.

சண்டை
இருவருமே இதனால் களத்தில் சண்டை போடுவது போல பேசிக்கொண்டனர். இதை பார்த்து சாம் கரன் பதற்றம் அடைந்து, அவரும் தன் பங்கிற்கு ஜாதவை திட்டினார். பின் தோனி வந்து சாமிடம் ஏதோ சொல்லவும் அவர் அமைதியானார். ஜடேஜாவிற்கும் ஜாதவிற்கும் இதனால் அணிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications