Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெலிட் செய்யப்பட்ட அந்த டிவிட்.. என்னதான் நடக்கிறது? பிராவோவையே சீண்டிய இளம் வீரர்.. ஷாக் பின்னணி!

துபாய்: பிராவோவை பார்த்து இளம் வீரர் கலீல் அஹமது கிண்டலாக சிரித்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

2020 ஐபிஎல் சீசன் தற்போதுதான் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே தற்போது மீண்டு வந்துள்ளது.

ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அதிரடியாக வெற்றிபெற்று பார்மிற்கு திரும்பி உள்ளது. இந்த போட்டியில் முதலில் சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்தது, அதன்பின் ஹைதராபாத்தை 147 ரன்களுக்கு சிஎஸ்கே சுருட்டி வெற்றி பெற்றது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் சிஎஸ்கே சார்பாக களமிறங்கிய பிராவோ டக் அவுட் ஆனார். களத்திற்கு வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி பிராவோ வெளியே சென்றார். இதற்கு முன் நடந்த போட்டியிலும் பிராவோ சரியாக பேட்டிங் செய்யாத நிலையில் ஹைதராபாத் போட்டியிலும் அவுட் ஆனார். கலீல் அஹமது பவுலிங்கில் பிராவோ விக்கெட்டை இழந்தார்.

விக்கெட்

விக்கெட்

இந்த விக்கெட்டை எடுத்த பின் கலீல் அஹமது பிராவோவை பார்த்து கிண்டலாக சிரித்தார். பொதுவாக பவுலர்கள் விக்கெட் எடுக்கும் போது பேட்ஸ்மேனை பார்த்து கிண்டல் செய்வது வழக்கம். இதில் தவறு இல்லை. ஆனால் கலீல் அஹமது பிராவோவை பார்த்து எகத்தாளமாக சிரித்தார்.

கிரிக்கெட் தெரியாத நபர்

கிரிக்கெட் தெரியாத நபர்

கிரிக்கெட் தெரியாத நபரை பார்த்து அவமானப்படுத்துவது போல கலீல் அஹமது சிரித்தார். இதை பார்த்து அவர் அணியின் சக வீரர்களே கோபம் அடைந்தனர். தனது தவறை உணர்த்த கலீல் அஹமது உடனே அதை திரித்துக் கொண்டு சிரிப்பதை நிறுத்திக் கொண்டார்.

தவறு

தவறு

இவரின் சிரிப்பு பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், அதுகுறித்து கலீல் அஹமது விளக்கம் அளித்தார். அவர் தனது டிவிட்டில், நான் பிராவோவை பார்த்து கிண்டலாக சிரிக்கவில்லை. நான் சிரித்ததற்கு வேறு காரணம் உள்ளது. பிராவோ ஒரு லெஜண்ட் வீரர். அவர் எனக்கு அண்ணன் போன்றவர் என்று கலீல் அஹமது விளக்கம் கொடுத்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர் என்ன நினைத்தாரோ திடீர் என்று அந்த டிவிட்டை டெலிட் செய்தார். தன்னுடைய தரப்பை விளக்கிய கலீல் அஹமது அதன்பின் அந்த டிவிட்டை டெலிட் செய்தார். இவர் ஏன் பிராவோவை பார்த்து சிரித்தார், ஏன் கிண்டல் செய்தார், ஏன் அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு பின் அந்த டிவிட்டை டெலிட் செய்தார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Friday, October 16, 2020, 20:24 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+