Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ரிப்போர்ட் வரவில்லை.. ஆனால் அவர் வலியில் துடித்தார்.. ஷ்ரேயாஸுக்கு என்ன ஆனது? தவான் பேட்டி

துபாய்: டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன நடந்தது, அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்து மூத்த வீரர் தவான் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. எத்தனை தடைகள் வந்தாலும்.. எதுவும் எங்களை தடுக்காது என்று உறுதியாக நின்று நேற்று டெல்லி அணி வெற்றிபெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட 20 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியின் பாதியில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் விழுந்து காயம் அடைந்தார். நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணியின் நோர்ட்ஜ் வீசிய 5வது ஓவரின் கடைசி பந்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. 153.7 கிமீ வேகத்தில் நோர்ட்ஜ் வீசிய பந்தை மிட் ஆப் திசையில் ஸ்டோக்ஸ் அடித்தார். பந்து பவுண்டரி கோட்டை நெருங்கி சென்றது.

நெருங்கியது

நெருங்கியது

அப்போது வேகமாக ஓடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தாவி டைவ் அடித்து பந்தை பிடித்தார். இவர் பந்து பவுண்டரி செல்வதை தடுத்தாலும், கீழே வேகமாக விழுந்ததில் இவருக்கு மோசமாக காயம் ஏற்பட்டது. வேகமாக சென்று கீழே விழுந்ததில் இவரின் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியில் கடுமையாக துடித்தார்.

துடித்தார்

துடித்தார்

மைதானத்திலேயே விழுந்து கடுமையாக இவர் துடித்தார். இதையடுத்து இவரை சோதனை செய்த மருத்துவர்கள் பெவிலியனுக்கு அழைத்து சென்றனர். இதனால் மீதம் இருந்த போட்டியில் தவான் கேப்டனாக செயல்பட்டார். ஆனாலும் இந்த தடைகளுக்கு பின்பும் கூட நேற்று டெல்லி அணிதான் வெற்றிபெற்றது. கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட தவான்.. கடைசி நேரத்தில் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து டெல்லியை வெற்றிபெற வைத்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்தநிலையில் போட்டிக்கு பின்பாக கூட பேட்டி கொடுக்கும் போதும் ஷ்ரேயாஸ் மைதானத்திற்கு வர முடியவில்லை.தவான்தான் மைதானத்திற்கு வந்து பேட்டி கொடுத்தார். தவான் கொடுத்த பேட்டியில், ஷ்ரேயாஸ் காயம் காரணமாக கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறார். அவர் வலியில் துடித்தார். ஆனால் அவரின் தோள்பட்டை தொடர்ந்து நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மோசம்

மோசம்

அவருக்கு மருத்துவ சோதனைகள் நடக்கும். அதன் ரிப்போர்ட் வந்த பின்தான் முடிவு எடுக்க முடியும்.அவர் குறித்து வேறு எதுவும் தகவல் கொடுக்க முடியாது என்று தவான் குறிப்பிட்டுள்ளார். டெல்லி அணியில் ஏற்கனவே பண்ட், இஷாந்த் சர்மா, மிஸ்ரா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது ஷ்ரேயாஸும் காயம் அடைந்து உள்ளார்.

Story first published: Thursday, October 15, 2020, 9:19 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+