Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசலுக்கு என்ன ஆச்சு?.. ஓடி வந்த வீரர்கள்.. சுருண்டு படுத்த ஜாம்பவான்.. களத்தில் என்ன நடந்தது?

துபாய்: கொல்கத்தா அணியின் முக்கியமான வீரர் ஆண்ட்ரு ரசல் இன்று பவுண்டரி எல்லையில் நடக்க முடியாமல் நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் இருந்து மோசமாக திணறிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சுப்மான் கில் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடஅடுத்த பக்கம் வரிசையாக வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

வரிசையாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில் கடைசி நேரத்தில் வந்த தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். வெறும் 29 பந்துகள் பிடித்த தினேஷ் கார்த்திக் 58 ரன்கள் எடுத்தார் . இதில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி அடக்கம். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 57 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

அதிரடி

அதிரடி

அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டியது. பஞ்சாப் அணியின் ஓப்பனிங் வீரர்கள் கே. எல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோரின் விக்கெட்டை எடுக்க முடியாமல் கொல்கத்தா வீரர்கள் திணறினார்கள். இரண்டு பேருமே அரை சதம் அடித்து அதிரடி காட்டி வந்தனர் .

ராகுல் எப்படி

ராகுல் எப்படி

இந்த நிலையில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கே. எல் ராகுல் அடித்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ஆண்ட்ரு ரசல் பிடிக்கலாம் என்று வேகமாக ஓடினார். ஆனால் அவரால் அந்த பந்தை கேட்ச் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்த பந்தை பவுண்டரி செல்லாமல் தடுக்க முயன்றார். வேகமாக ஓடி சென்று பவுண்டரி செல்லாமல் அந்த பந்தை தடுக்க முயன்றார்.

ரஸல் விழுந்தார்

ரஸல் விழுந்தார்

ஆனால் அந்த பந்தை ரசலால் தடுக்க முடியவில்லை. அதே சமயம் அவர் ஓடிய வேகத்தில், வேகமாக சென்று பவுண்டரி தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இவரின் காலில் அப்போது பலத்த காயம் ஏற்பட்டது. பவுண்டரி தடுப்பில் வேகமாக மோதியதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

துடித்தார்

துடித்தார்

இந்த நிலையில் அவர் வலியால் துடித்தார். நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கீழேயே விழுந்து கஷ்டப்பட்டார். அதன்பின் அவரை சக வீரர்கள் வந்து தூக்கியபடி அழைத்து சென்றனர். நடக்க முடியாமல் பாதி போட்டியில் அவர் கஷ்டப்பட்டபடி வெளியேறினார். இவர் நடந்து சென்றதை பார்க்கவே பலரும் அதிர்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 10, 2020, 18:56 [IST]
Other articles published on Oct 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+