Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரே கேப்டனாக இருக்கட்டும்.. தினேஷ் கார்த்திக் எழுதிய அந்த கடிதம்.. ஷாருக்கின் முடிவு..நடந்தது என்ன?

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் முடிவு எடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் புதிய திருப்பமாக கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளார். பொதுவாக ஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்களுக்கு இடையே கேப்டன்கள் பதவி விலக மாட்டார்கள்.

ஒரு அணி எவ்வளவு மோசமாக ஆடினாலும் ஐபிஎல் தொடரின் பாதியில் கேப்டன்கள் பதவி விலக மாட்டார்கள். அது அணியை மேலும் பாதிக்கும் என்பதால் கேப்டன்கள் இப்படி அவசர முடிவை எடுக்க மாட்டார்கள்.

விலகல்

விலகல்

இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தினேஷ் கார்த்திக் துணிச்சலாக அறிவித்துள்ளார். கொல்கத்தா அணி இந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 4 போட்டியில் வென்றுள்ளது. மற்ற சில அணிகளை விட நல்ல நிலையில் இருந்தும் கூட தினேஷ் கார்த்திக் தற்போது கொல்கத்தா கேப்டன் பதவியிலிருந்து விலகி உள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இன்று மும்பைக்கு எதிராக கொல்கத்தா மோதுகிறது. மேட்ச்சிற்கு சில மணி நேரங்கள் முன் தினேஷ் கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. தினேஷ் கார்த்திக் தனது கடிதத்தில், நான் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

கவனம்

கவனம்

என்னுடைய தனிப்பட்ட பேட்டிங்கில், விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். கேப்டனாக அதை செய்ய முடியாது. அதனால் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்கிறேன், என்று தினேஷ் கார்த்திக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடிதம்

கடிதம்

அணிக்காக பேட்ஸ்மேனாக மேலும் உழைக்க நினைக்கிறன். இயான் மோர்க்கனோடு இணைந்து பணியாற்றி உள்ளேன். அவருக்கு இந்த பொறுப்பை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இவரின் பதவி விலகலை அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த இயான் மோர்கன் , கொல்கத்தா அணியில் கேப்டன் தனியாக முடிவு எடுப்பது கிடையாது . அவருக்கு ஈகோ இல்லை. அவர் எல்லோருடனும் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுப்பார். அணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. நானும், அவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தினேஷ் கார்த்திக் குறித்து குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் இயான் மோர்கனுக்கு கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார்.

Story first published: Friday, October 16, 2020, 19:07 [IST]
Other articles published on Oct 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+