Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது பெரிய வலியை கொடுத்தது.. சிஎஸ்கே தோல்விக்கு ஒரே காரணம்தான்.. தோனி பரபரப்பு குற்றச்சாட்டு!

துபாய்: டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணி தோல்வி அடைந்த நிலையில், சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம் என்று கேப்டன் தோனி குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை மோசமாக தோல்வி அடைந்தது. இது ஐபிஎல் தொடரில் சென்னையின் இரண்டாவது தோல்வி ஆகும். மும்பைக்கு எதிரான முதல் போட்டியை வென்ற சென்னை அடுத்தடுத்து ராஜஸ்தான்,டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

நேற்று நடந்த போட்டியில் டெல்லி 175 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன்பின் இறங்கிய சென்னை 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தோனி பேட்டி

தோனி பேட்டி

இந்த போட்டிக்கு பின் தோனி அளித்த பேட்டியில், இன்று நடந்த போட்டி எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எங்களுக்கு சாதகமான சூழ்நிலை போட்டியில் நிலவவில்லை. மைதானத்தில் ஈரப்பதம் இல்லை. அதே சமயம் விக்கெட்டும் விழவில்லை. எங்கள் அணியின் பேட்டிங் சொதப்பிவிட்டது.

சிக்கலாக மாறியது

சிக்கலாக மாறியது

தொடக்கத்தில் சென்னை அணியின் பேட்டிங் சரியாக இல்லை. அது பெரிய வலியை கொடுக்கிறது. தொடக்கத்தில் சரியாக ஆடாத காரணத்தால், தேவையான ரன் ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது. இது பிரஷரை அதிகப்படுத்தியது. கடைசி நேரத்தில் இது சிக்கலாக மாறியது. தொடக்கம் மிக மெதுவாக இருந்தது.

மாற்றங்களை கொண்டு வர வேண்டும்

மாற்றங்களை கொண்டு வர வேண்டும்

போட்டியில் தோல்விக்கும் அதுவே காரணமாக அமைந்துவிட்டது. உடனே இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தொடக்கம் நன்றாக இருந்தால் நாங்கள் வென்று இருப்போம். நாங்கள் புதிய திட்டங்களோடு வர வேண்டும்.எங்களுக்கு அடுத்த போட்டி வரை 6 நாட்கள் டைம் இருக்கிறது. புதிய கலவையை அணிக்குள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஸ்பின் பவுலிங்

ஸ்பின் பவுலிங்

சென்னை அணியின் பவுலிங் இன்னும் முழுமையாக எடுபடவில்லை. முக்கியாக ஸ்பின் பவுலிங் வேலை செய்ய தொடங்கவில்லை. சென்னை வீரர்கள் உடனே தங்கள் பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த போட்டிக்குள் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, September 26, 2020, 14:23 [IST]
Other articles published on Sep 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+