
எப்படி
இதன் பின் நடந்த சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க, கொல்கத்தா அணி எளிதாக 3 ரன்கள் எடுத்து வென்றது. நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு வார்னர் ஓப்பனிங் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வார்னருக்கு பின் நேற்று கேன் வில்லியம்சன் ஓப்பனிங் இறங்கினார்.

ஏன் இப்படி
நேற்று கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த கேன் வில்லியம்சன் தொடையில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். தொடையில் அவருக்கு கடுமையான வலி இருந்த காரணத்தால் மைதானத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதன் பின்தான் நேற்று கேன் வில்லியம்சன் ஓப்பனிங் இறங்கினார்.

விளக்கம்
இந்த நிலையில் நேற்று கேன் வில்லியம்சன் ஓப்பனிங் இறங்கியது ஏன் என்று அணியின் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் விளக்கம் அழைத்துள்ளார். அதில், நேற்று வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.தொடையில் அவருக்கு தொந்தரவு இருந்தது. மிடில் ஆர்டரில் இறங்கினால் அவரால் வேகமாக ரன்களை ஓடி எடுக்க முடியாது.

முடியாது
2 அல்லது மூன்று ரன்களை அவரால் ஓடி எடுக்க முடியாது. இதன் காரணமாகவே நேற்று அவரை முதலில் ஓப்பனிங் இறக்கி பவர் பிளேவில் அடிக்க சொன்னோம். சிங்கிள் எடுக்காமல் பவுண்டரி, சிக்ஸ் என்று வில்லியம்சன் அடிக்க முடியும். இதன் மூலம் அவரால் முடிந்த அளவு ரன்களை எடுக்க முடியும். அதனால்தான் ஓப்பனிங் அனுப்பினோம்.

அடித்தார்
அதேபோல் நேற்று நாங்கள் திட்டமிட்டபடி கேன் வில்லியம்சன் நன்றாக ஆடினார். 19 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார். வார்னரும் நன்றாகவே பேட்டிங் செய்தார். ஆனால் கடைசி கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆட்டம் கையைவிட்டு போய்விட்டது.நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக ஆடி இருக்க வேண்டும், என்று முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications