Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏற்றுக்கொள்ளவே முடியாது.. என்ன "நான்சென்ஸ்" இது.. தோனியை கடுமையாக விமர்சித்த பீட்டர்சன்.. பரபரப்பு!

அபுதாபி: ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி 7வது இடத்தில் களமிறங்கியதை இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை ராஜஸ்தான் மற்றும் சென்னைக்கு இடையில் நடந்த போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை 200 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் சென்னைக்கு வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட, சென்னை அணி செய்த சில தவறுகளால் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே கேப்டன் தோனி 7வது இடத்தில் களமிறங்கியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

விவாதம்

விவாதம்

இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் தற்போது பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் விவாத பொருளாக மாறியுள்ளது. தோனி இப்படி 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது தவறு என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளார்கள். தொடர்ந்து விமர்சனங்கள் வந்த நிலையில் அதற்கு தோனி விளக்கமும் கொடுத்து இருந்தார். அதில், நான் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடவில்லை. நீண்ட நேரம் நான் பேட்டிங் பயிற்சி செய்யவில்லை.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

இதனால்தான் நான் சீக்கிரமே பேட்டிங் இறங்கவில்லை. அதேபோல் சில வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்தேன். சாம் கரனை முன்பே இறக்கி சோதனை செய்தோம். சோதனை முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்றால் மீண்டும் பழைய விஷயங்களை செய்யலாம்.இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம் என்று தோனி விளக்கம் அளித்தார் .

கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்

இந்த நிலையில் தோனியின் விளக்கம் குறித்து முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு முட்டாள்தனமான பதில். அவர் தான் 7வது ஆடுவது குறித்து சரியாக விளக்கம் அளிக்கவில்லை . அவர் சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம்.

தவறு இல்லை

தவறு இல்லை

அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தொடரின் தொடக்கத்திலேயே இப்படி சோதனை முயற்சி செய்தது சரியில்லை. டி20 போட்டிகளில் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது. டி20 தொடரில் மொத்தமாக எப்போது வேண்டுமானாலும் தொடர் கையை விட்டு போகும்.

போட்டிகள் தோல்வி

போட்டிகள் தோல்வி

அடுத்தடுத்து 5 போட்டிகள் தோல்வி அடைந்து மிக எளிதாக வெளியேற முடியும். ஐபிஎல்லில் எப்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. எல்லாம் கையைவிட்டு போன பின் பைனல் போக முடியுமா என்று யோசித்துக் கொண்டு இருக்க முடியாது. இப்போதே தோனி துரிதமாக செயல்பட்டு, அணியை வெற்றி பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.

காரணம் தவறு

காரணம் தவறு

தோனி சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தோனி கடந்த போட்டியில் இறங்கி இருந்தால் போட்டியின் முடிவே தலைகீழாக மாறி இருக்கும். மொத்தமாக ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கும். அவர் கொஞ்சம் முன்பே இறங்கி இருக்கலாம். வெற்றி பெறுவதற்கு கொஞ்சமாவது வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

எளிமையான வெற்றி

எளிமையான வெற்றி

அந்த போட்டியை பார்த்தாலே தெரிந்து இருக்கும். டு பிளசிஸ் உடன் முன்பே தோனி இணைந்து அதிரடி காட்டி இருக்க வேண்டும். வெறும் 16 ரன்கள் மட்டுமே வித்தியாசம். முன்பே தோனி இறங்கி இருந்தால் எளிதாக வென்று இருக்கலாம். 4-5 ஓவர்கள் சிஎஸ்கே வெறும் சிங்கிள் மட்டுமே எடுத்தது

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

அப்போதே கொஞ்சம் வெற்றிபெறும் ஆர்வத்துடன் சென்னை விளையாடி இருக்க வேண்டும். சென்னை வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்துடன் விளையாடி இருக்க வேண்டும். அந்த விருப்பம் சென்னை அணியிடம் இல்லாமல் போய்விட்டது. சென்னை எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை மோசமான பிளானால் சொதப்பிவிட்டார்கள், என்று கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, September 24, 2020, 16:35 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+