Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைகீழாக மாறும்.. இந்த 4 அணிகள்தான் பிளே-ஆப் செல்லும்.. பரபர கணிப்பு.. சிஎஸ்கே தரப்போகும் சர்ப்ரைஸ்!

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல கூடிய நான்கு அணிகள் எது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் விமர்சகர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் எது வலிமையான அணி, எது வலிமை இல்லாத அணி என்றே கணிக்க முடியவில்லை. எப்போதும் ஐபிஎல் தொடரில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணியை எளிதாக கணிக்க முடியும்.

ஆனால் இந்த முறை எல்லா அணிகளும் டாப் நான்கு இடங்களை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது. முக்கியமாக இந்த முறை பஞ்சாப், பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகள் கூட பைனல் செல்ல தீவிரமாக முயன்று வருகிறது.

முயற்சி

முயற்சி

இந்த நிலையில்தான் பிளே ஆப்பிற்கு எந்த அணிகள் எல்லாம் செல்லும் என்று கேள்வி எழுந்துள்ளது. இப்படி கடுமையான போட்டி நிலவி வந்தால் பிளே ஆப் மொத்தமாக மாற்றம் அடையும். சிஎஸ்கே போன்ற அணிகள் பிளே ஆப் செல்வதே சந்தேகம்தான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து இருந்தனர். சிஎஸ்கே இந்த முறை பார்மில் இல்லை.. இதனால் அவர்கள் பிளே ஆப் செல்வது கடினம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் 2020 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல கூடிய நான்கு அணிகள் எது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் விமர்சகர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார். ஆச்சர்யமாக.. சிஎஸ்கே கண்டிப்பாக பிளே ஆப் செல்லும் என்று அவர் கூறியுள்ளார். சிஎஸ்கே இந்த முறை பார்ம் இல்லாதது போல தோன்றும். ஆனால் அது உண்மை இல்லை.

மீண்டு வரும்

மீண்டு வரும்

அவர்கள் மீண்டு வருவார்கள். வரிசையாக போட்டிகளில் வென்று அவர்கள் கண்டிப்பாக பிளே ஆப் செல்வார்கள். அணியில் காயம் அடைந்த வீரர்களும் திரும்பி வந்துவிட்டனர். இதனால் கண்டிப்பாக சிஎஸ்கே பிளே ஆப் செல்லும். அதேபோல் மும்பை அணியும் பிளே ஆப் செல்வது உறுதி. அந்த அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டரை மும்பை கொண்டு உள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இன்னொரு பக்கம் டெல்லி பிளே ஆப் செல்லும் என்று நம்புகிறேன். அந்த அணி முழு பார்மில் உள்ளது. வீரர்கள் எல்லோரும் இளைஞர்கள். கண்டிப்பாக இந்த தொடர் முழுக்க அவர்கள் சிறப்பாக விளையாட வாய்ப்புள்ளது. இந்த சீசனில் டெல்லி பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கும் என்று ஷேன் வார்னே கூறியுள்ளார். அதேபோல் ராஜஸ்தான் அணி பிளே ஆப் செல்லும் என்றுள்ளார்.

தலைகீழாக மாறும்

தலைகீழாக மாறும்

இப்போது இருக்கும் புள்ளிகள் டேபிளை நம்ப வேண்டாம். போக போக எல்லாம் தலைகீழாக மாறும். ராஜஸ்தான் கண்டிப்பாக பிளே ஆப் செல்லும். இந்த 4 நான்கு அணிகள்தான் செமி பைனல் போட்டிகளில் ஆடும். இதனால் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்க போகிறது. சிஎஸ்கே, டெல்லி அணிகள் தொடரில் நிறைய சர்ப்ரைஸ் கொடுக்கும் என்று வார்னே கூறியுள்ளார்.

Story first published: Friday, October 2, 2020, 11:19 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+