Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிதான் ஆட்டமே.. 2 முக்கிய வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய பிளான்.. உள்ளே வரும் 3 பேர்.. சிஎஸ்கே திட்டம்?

துபாய்: ஐபிஎல் 2020 தொடருக்கான டிரான்ஸ்பர் பணிகளை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணி மூன்று முக்கியமான வீரர்களை அணிக்குள் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடருக்கு மத்தியில் 8 அணிகளுக்கும் டிரான்ஸ்பர் வாய்ப்பு வழங்கப்படும். டிரான்ஸ்பர் என்பது ஒரு அணியில் இருக்கும் வீரரை இன்னொரு அணி தொடருக்கு மத்தியில் ஏலம் எடுப்பது ஆகும்.

ஒரு அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரருக்கு காசு கொடுத்து அந்த வீரரை இன்னொரு அணி தங்கள் அணிக்குள் எடுக்க முடியும். தங்கள் அணியில் எந்த இடத்தில் டீம் வீக்காக இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றபடி அணி நிர்வாகம் வீரர்களை தங்கள் அணியில் எடுக்கும்.

எப்போது தொடங்கும்

எப்போது தொடங்கும்

இந்த டிரான்ஸ்பர் பணிகள் பொதுவாக ஐபிஎல் தொடரின் மையத்தில் நடக்கும். அதாவது எல்லா அணிகளும் 7 போட்டிகள் விளையாடிய பின் இந்த பணிகள் தொடங்கும். இதனால் அடுத்த வாரம் அணிகள் டிரான்ஸ்பர் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த டிரான்ஸ்பரில் எல்லா வீரர்களும் கலந்து கொள்ள முடியாது. ஒரு அணியில் 2 போட்டிகள் அல்லது அதற்கும் குறைவான போட்டிகள் ஆடிய வீரர்களை மட்டுமே டிரான்ஸ்பர் செய்ய முடியும். 2 க்கும் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர்களை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. இதில் வெளிநாட்டு வீரர், உள்நாட்டு வீரர்களையும் டிரான்ஸ்பர் செய்ய முடியும்.

பணம்

பணம்

ஒவ்வொரு அணிக்கும் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பர்ஸ் தொகைக்கு வெளியில் இருந்துதான் பணம் கொடுத்த இந்த வீரர்களை வாங்க வேண்டும். இதன் மூலம் மற்ற அணியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வீரர்கள் வேறு அணிக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த டிரான்ஸ்பரின் போது சிஎஸ்கே அணி புதிய வீரர்களை அணிக்குள் எடுக்கும் என்று கூறுகிறார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

அதேபோல் இந்த டிரான்ஸ்பர் தங்கள் அணியில் இருக்கும் வீரர்களையும் வெளியிட முடியும். அந்த வகையில் இந்த முறை சிஎஸ்கே முக்கியமான மிடில் ஆர்டர் வீரர்களை ஏலம் எடுக்கும் என்கிறார்கள். சென்னை அணியில் மிடில் ஆர்டர்தான் வலிமை இன்றி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே மிடில் ஆர்டர் வீரர்களை அணிக்குள் எடுக்க வாய்ப்புள்ளது.

வீரர்கள்

வீரர்கள்

மொத்தம் 3 வீரர்களை உள்ளே எடுத்துவிட்டு, 2 வீரர்களை வெளியே அனுப்ப சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி சிஎஸ்கே அணியில் இருந்து லுங்கி நிகிடி நீக்கப்பட வாய்ப்புள்ளது. நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாலும், சிஎஸ்கே மீது லுங்கி அதிருப்தியில் இருப்பதாலும் இவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக வீரர் சாய் கிஷோரும் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

யார்

யார்

மாறாக சிஎஸ்கே அணி நிர்வாகம் ரஹானேவை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பெங்களூர் அணியில் இருக்கும் பார்த்தீவ் படேல் சிஎஸ்கேவிற்கு வர வாய்ப்புள்ளது. இன்னொரு பக்கம் ஹைதராபாத் அணியில் இருக்கும் விராட் சிங்கிற்கும் சிஎஸ்கே குறி வைத்துள்ளது. இவர்கள் மூவரில் ஒருவரை சிஎஸ்கே அணிக்குள் எடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:36 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+