Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏதோ சரியில்லை.. ஜெகதீசன் இருக்கும் போது ஜாதவ் வந்தது எப்படி? சிஎஸ்கேவில் என்ன நடக்கிறது? பின்னணி

துபாய்: சிஎஸ்கே அணிக்குள் மீண்டும் ஜாதவ் எடுக்கப்பட்டது ஏன் என்று கேள்விகள் எழுந்து இருக்கிறது.

2020 ஐபிஎல் தொடரில் மோசமான அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே உருவெடுத்துள்ளது. இதுவரை 8 போட்டிகளில் ஆடி இருக்கும் சிஎஸ்கே வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு காரணமாக மிடில் ஆர்டர் பேட்டிங் கூறப்பட்டது. இதையடுத்து மிடில் ஆர்டரில் மோசமாக சொதப்பி வந்த கேதார் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நீக்கம் ஏன்

நீக்கம் ஏன்

மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் ஜாதவ் கடந்த 20 போட்டிகளில் எதிலும் 30+ ரன்களை அடிக்கவில்லை. ஒரு காலத்தில் இவர் சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தாலும் கூட தற்போது இவர் சரியாக பேட்டிங் செய்வது இல்லை. ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் இவர் மோசமாக ஆடினார்.

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே எப்படி

சிஎஸ்கே சேசிங் செய்ய வந்துவிட்டாலே ஜாதவ் மெதுவாகத்தான் ஆடுகிறார் என்று புகார் உள்ளது. சிஎஸ்கே அணியில் தோனி ஆடுவதை விட இவர் மிகவும் மெதுவாக ஆடுகிறார். இந்த நிலையில்தான் கடந்த கொல்கத்தா போட்டிக்கு பின்பாக ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெகதீசன் அணிக்கு வந்தார்.

ஜெகதீசன் எப்படி

ஜெகதீசன் எப்படி

ஜெகதீசன் பெங்களூர் அணிக்கு எதிராக நன்றாக ஆடி இருந்தாலும் கூட அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கூடுதல் பவுலருடன் (சாவ்லா) சிஎஸ்கே களமிறங்கியது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் சாவ்லா நீக்கப்பட்டு மீண்டும் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் சரியாக ஆடவில்லை என்று நீக்கப்பட்ட ஜாதவ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஜெகதீசன் நல்ல பார்மில் இருக்கிறார். முதல் போட்டியில் நன்றாகவே பேட்டிங் செய்தார். ஆனால் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டனர். அவருக்கு பதிலாக ஜாதவை மீண்டும் எடுத்துள்ளனர். இந்த முடிவை எல்லாம் யார் எடுப்பது? சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது என்று கேள்விகள் எழுந்துள்ளது. ஜெகதீசன் இருக்கும் போது ஜாதவ் வந்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

ஜெகதீசனை 6-7 இடத்தில் இறக்க முடியாது என்றால் 5வது இடத்திலாவது இறக்க வைக்க வேண்டும். ஜாதவ் பல முறை வாய்ப்பு கொடுத்தும் தன்னை நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது இன்று அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது யார். யார்தான் இது போன்ற தவறான முடிவுகளை அணியில் எடுப்பது என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, October 17, 2020, 19:58 [IST]
Other articles published on Oct 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+