Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. தாஹிரை எடுக்க மறுத்த தோனி..பிராவோவிற்கு பதிலாக புதிய வீரர்..என்ன நடந்தது?

துபாய்: ராஜஸ்தானுக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவில் இருந்து பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று அபுதாபியில் நடக்கிறது. இரண்டு அணிகளுக்கு இன்று நடக்கும் போட்டி மிகவும் முக்கியமானது ஆகும்.

இந்த தொடரில் பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் சிஎஸ்கே இன்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எத்தனை

எத்தனை

சிஎஸ்கே இதுவரை நடந்துள்ள 9 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இன்னொரு பக்கம் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. இதனால் மீதம் இருக்கும் 5 போட்டியிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

கடைசி போட்டி

கடைசி போட்டி

கடந்த போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு டெத் ஓவரில் சொதப்பியதே காரணமாக பார்க்கப்பட்டது. டெல்லிக்கு எதிரான அந்த போட்டியில் பிராவோ பாதியில் வெளியேறினார். இதன் காரணமாக கடைசியில் ஜடேஜா ஓவர் போட்டார். இதனால் சிஎஸ்கே அந்த போட்டியில் மோசமாக தோல்வி அடைந்தது.

காயம்

காயம்

பிராவோவிற்கு ஏற்பட்டு இருக்கும் காயம் சரியாக இன்னும் 2 வாரம் ஆகும் என்கிறார்கள். இதனால் இன்று நடக்கும் போட்டியில் அவர் ஆட போவது இல்லை. இன்னும் சில போட்டிகளில் பிராவோ சிஎஸ்கே அணிக்காக ஆட மாட்டார். இன்று பிராவோவிற்கு பதிலாக அணியில் இம்ரான் தாஹிர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அணியில் இன்று இம்ரான் தாஹிர் இடம்பெறவில்லை. மாறாக இன்று ஆஸ்திரேலிய பவுலர் ஜோஸ் ஹசல்வுட் சேர்க்கப்பட்டுள்ளார் . இம்ரான் தாஹிர் நன்றாக பந்து வீசுவார் என்றாலும் ஏற்கனவே சிஎஸ்கேவிற்கு நிறைய ஸ்பின் ஆப்ஷன் உள்ளது.

டெத்

டெத்

ஆனால் டெத் பவுலிங் போட ஆள் இல்லை. பிராவோ இல்லாத காரணத்தால் கடைசியில் டெத் ஓவர் போட ஆள் இல்லை. இதனால் இன்று தாஹிருக்கு பதிலாக ஹசல்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Story first published: Monday, October 19, 2020, 19:34 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+