Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சில விஷயங்கள் சரியாக இல்லை.. பலர் சொல்லியும் நீக்காத தோனி.. இதுதான் காரணம்.. வாட்சன் சொன்ன ரகசியம்!

துபாய்: பல விமர்சனங்களுக்கு இடையிலும் நேற்று தொடக்க வீரர் வாட்சனுக்கு சிஎஸ்கேவின் ஆடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வாட்சனை சிஎஸ்கே தொடர்ந்து நம்பியதே அணியின் வெற்றிக்கும் தற்போது காரணமாக அமைந்துள்ளது.

அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போய் இருந்த சிஎஸ்கே தற்போது ஐபிஎல் தொடரில் கம் - பேக் கொடுத்துள்ளது. இப்படித்தான் ஆட வேண்டும் என்று சொல்லி சொல்லி வாட்சனும், டு பிளஸிசும் நேற்று அதிரடி காட்டி இருக்கிறார்கள்.

ஒரு விக்கெட் கூட விழாமல் நேற்று பஞ்சாப்பை சிஎஸ்கே வீழ்த்தி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணியும் விக்கெட் விழாமல் சேஸிங்கில் வெற்றிபெறாத நிலையில் சிஎஸ்கே அந்த சாதனையை செய்துள்ளது

வாட்சன் நீக்கம்

வாட்சன் நீக்கம்

நேற்றைய போட்டிக்கு முன்பு வரை வாட்சனை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடுமையாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது. எந்த போட்டியிலும் வாட்சன் சரியாக ஆடவில்லை. அவரை நீக்கிவிட்டு, வேறு வெளிநாட்டு வீரரை அணியில் எடுக்க வேண்டும். வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று வாட்சனுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. விமர்சனங்களுக்கு இடையே களமிறங்கிய வாட்சன் நேற்று தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 53 பந்துகள் பிடித்த வாட்சன் 11 பவுண்டரி, 3 சிக்ஸர் என்று 83 ரன்கள் எடுத்தார். நேற்று டு பிளஸிசும் 53 பந்தில் 87 ரன்கள் எடுக்க.. விக்கெட்டே விழாமல் சிஎஸ்கே வெற்றிபெற்றது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த போட்டிக்கு பின் பேட்டி அளித்த வாட்சன், இது போல பேட்டிங்கை செய்வதை பார்க்க எங்களுக்கே சந்தோஷமாக இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தின் சில விஷயங்கள் சரியாக இல்லை. சில நுட்பங்களில் நான் கொஞ்சம் சொதப்பினேன். தொடக்கத்தில் சில விஷயங்கள் எனது கட்டுப்பாட்டில் இல்லை. முன்பக்கம் காலை சரியாக வைத்து, வெயிட் கொடுத்து அடிக்க முயன்றேன்.

முடியவில்லை

முடியவில்லை

ஆனால் இதற்கு முன் அப்படி ஆட முடியவில்லை. இன்று அது கை கூடி வந்துள்ளது. நாங்கள் எங்கள் அணியில் இருக்கும் சக வீரர்களை பாராட்டிக் கொள்வோம். டு பிளசிஸ் சிறப்பான வீரர். அவருடன் பேட்டிங் செய்ய எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.

தனித்துவம்

தனித்துவம்

சிஎஸ்கே அணியின் தனித்துவம் இதுதான். சிஎஸ்கே அணிக்கு அதிக அனுபவம் உள்ளது, தொடர்ந்து வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே இருந்துள்ளது. அவர்கள் வீரர்களை நம்புகிறார்கள். அதுதான் முக்கியம். சிஎஸ்கேவில் என்னை நம்பினார்கள். எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார்கள். சிஎஸ்கே அணியில் பயம் குடிகொள்ள முடியாது.

சரியாகிவிடும்

சரியாகிவிடும்

சில விஷயங்களை நன்றாக செய்தால் எல்லாம் சரியாகிவிடும், என்று வாட்சன் குறிப்பிட்டுள்ளார். சிஎஸ்கே தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது என்று வாட்சன் குறிப்பிட்டுள்ளார். தோனி மீது கடுமையான அழுத்தம் வைக்கப்பட்டும் கூட வாட்சனை அவர் தொடர்ந்து நம்பினார். போனால் போகட்டும் என்று அணியை விட்டு வாட்சனை அனுப்பவில்லை.

நம்பிக்கை

நம்பிக்கை

மூன்று போட்டிகள் சரியாக ஆடவில்லை என்று வாட்சனை தோனி நீக்கவில்லை. வாட்சன் செட்டாகும் வரை தோனி காத்து இருந்தார். இதன் மூலம் தற்போது வாட்சன் பார்மிற்கு திரும்பி வந்துள்ளார். பெரிய அளவில் வாட்ஸன் மீது பிரஷர் போடாமல்.. அவருக்கு தோனி தேவையான டைம் கொடுத்தார். இந்த நம்பிக்கைதான் வாட்சன் பார்ம் திரும்பியதற்கு காரணம் என்றும் கூறுகிறார்கள்.

Story first published: Monday, October 5, 2020, 9:15 [IST]
Other articles published on Oct 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+