யாரையும் தூக்க முடியாது.. நடப்பது நடக்கட்டும்.. தோனி எடுத்த முடிவு.. பின்னணியில் "அந்த" காரணம்!
துபாய்: பஞ்சாப்பிற்கு எதிராக இன்று ஐபிஎல் போட்டியில் விளையாடும் சிஎஸ்கே அணியில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. சிஎஸ்கே அணி அதே பழைய டீமுடன் விளையாட உள்ளது.
பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இன்று இரண்டு அணிகளும் மோதுகிறது. இரண்டு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முக்கியமாக சிஎஸ்கே வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

என்ன கோரிக்கை
கடந்த போட்டியில் சென்னை அணியில் வாட்சன் மற்றும் கேதார் ஜாதவ் இரண்டு பேரும் மோசமாக ஆடினார்கள். சென்னை அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. முக்கியமாக ஓப்பனர் வாட்சன் தொடர்ந்து நான்கு போட்டிகளாக சொதப்பி வருகிறார். எல்லா போட்டியிலும் சொற்ப ரன்களில் இவர் அவுட்டாகி வருகிறார்.

கேதார் ஜாதவ்
இன்னொரு பக்கம் கேதார் ஜாதவ் கடந்த 20 போட்டிகளாக ஐபிஎல்லில் மிக மோசமாக ஆடி வருகிறார். சென்னை அணிக்காக ஒரு வின்னிங் இன்னிங்ஸ் கூட இவர் ஆடவில்லை. மற்ற அணிகளில் மிடில் ஆர்டர் வீரர்கள் நெருப்பு போல இருக்கிறார்கள். ஆனால் சிஎஸ்கேவில் மட்டுமே கேதார் ஜாதவ் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி வருகிறார்.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஏன்?
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. சிஎஸ்கேவிற்குள் ஜெகதீசனை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. சிஎஸ்கேவும் கேதார் ஜாதவை நீக்கும் முடிவில் இருப்பதாகவே தகவல்கள் வந்தது. ஆனால் இன்று சிஎஸ்கேவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மாற்றம்
கடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அதே 11 வீரர்கள் இன்றும் விளையாடுகிறார்கள். கேதார் ஜாதவ், வாட்சன் இருவரும் இன்றும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்கள். தோனி இவர்களை நீக்காமல் வாய்ப்பு கொடுத்ததற்கு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு மேலும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்க தோனி நினைக்கிறார்.

மாற்ற மாட்டார்
பொதுவாக தோனி போட்டிக்கு இடையே அடிக்கடி வீரர்களை மாற்ற மாட்டார். வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை பார்மிற்கு கொண்டு வருவார். சாவ்லா போன்ற வீரர்களை கூட தோனி பார்மிற்கு கொண்டு வந்துள்ளார். இதனால் கண்டிப்பாக வாட்சன் மற்றும் ஜாதவ் பார்மிற்கு வருவார்கள் என்று தோனி நினைக்கிறார். அதேபோல் இவர்களை நீக்கினால் அது அணியில் மற்ற வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று தோனி நினைக்கிறார், என்கிறார்கள்.

இன்று பேசினார்
இதனால்தான் இன்று பேசிய தோனி, நாங்கள் சேசிங் செய்வதில் அனுபவம் கொண்ட அணி. எங்களுக்கு டிரெஸ்ஸிங் ரூமில் நல்ல உறவு நீடிக்க வேண்டும். அப்போதுதான் அணி நன்றாக இருக்கும். வீரர்களுக்கு இடையே உறவு நன்றாக இருந்தால் போட்டியும் நன்றாக இருக்கும் என்று தோனி கூறியுள்ளார். இதுதான் வீரர்கள் மீது தோனி கடுமையான நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications