Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே மேட்ச்தான்.. தமிழக வீரரை உட்கார வைத்த தோனி.. சிஎஸ்கே இறக்கிய "பார்முலா 2".. மாபெரும் திட்டம்!

துபாய்: ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவில் இருந்து என் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 7 போட்டிகளில் வரிசையாக ஒரு போட்டியில் கூட சிஎஸ்கே டாஸ் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே டாஸ் வென்றது. முதல் முறையாக டாஸ் வென்ற தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

பேட்டிங்

பேட்டிங்

இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவில் இருந்து என் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு போட்டிகளாக அணியில் பியூஸ் சாவ்லா இடம்பெறவில்லை.

கரன் சர்மா

கரன் சர்மா

இந்த நிலையில் தற்போது அணியில் இருந்து ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மீண்டும் பியூஷ் சாவ்லா அணிக்குள் வந்துள்ளார் கடந்த போட்டியில்தான் முதல் முறையாக ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் போட்டியில் அவர் சுமாராக ஆடி இருந்தாலும் இன்று நீக்கப்பட்டுள்ளார்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி வருகிறது. இதனால் ஜாதவிற்கு பதிலாக ஜெகதீசன் அணிக்குள் வந்தார். இந்த நிலையில் இருக்கிற பேட்ஸ்மேனையும் தூக்கிவிட்டு கூடுதலாக பவுலர் சாவ்லாவை கொண்டு வந்து இருக்கிறார் தோனி. ஏற்கனவே அணியில் கரன் சர்மா வேறு இருக்கிறார். இதனால் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இன்னொரு பக்கம் , இதனால் சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலிங் வலிமை அடைந்துள்ளது. சிஎஸ்கே இத்தனை சீசன்களில் வெற்றிபெற அணியின் "பார்முலா -2" எனப்படும் ஸ்பின் பவுலிங் பிளான்தான் உதவி செய்தது. அதாவது இரண்டு முழு நேர ஸ்பின் பவுலர்களை வைத்து சிஎஸ்கே விளையாடும். இந்த முறை இதுவரை அப்படி விளையாடாத சிஎஸ்கே மீண்டும் இன்று ஸ்பின் பவுலர்களை நம்பி களமிறங்கி உள்ளது.

செம பிளான்

செம பிளான்

ஒரு பேட்ஸ்மேனை உட்கார வைத்தாலும் பரவில்லை . விக்கெட் எடுக்க வேண்டும். எதிரணியை சுருட்ட வேண்டும் என்று சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகளில் இரண்டு முழு நேர ஸ்பின் பவுலர்கள் ஆடுகிறார்கள். அந்த அணிகளுக்கு இந்த பார்முலா உதவி உள்ளது. இதனால் தற்போது சிஎஸ்கேவும் அதேபோல் இரண்டு ஸ்பின் பவுலர்களை களமிறக்கியுள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 13:58 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+