Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனியும் முடியாது.. காட்டிக்கொடுத்த 2 சிஎஸ்கே போட்டிகள்.. தோனியின் திடீர் ஓய்விற்கு இதுதான் காரணமா?

சென்னை: சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன் என்று விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. உண்மையில் தோனி எடுத்த முடிவு சரியானதுதான் என்று கூறுகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 5 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

அதிலும் சிஎஸ்கே போட்டிகள் எல்லாம் பெரிய அளவில் கடைசி நொடி வரை திரில்லாக சென்றது.

சென்னை கேப்டன்

சென்னை கேப்டன்

இந்த நிலையில் இரண்டு சிஎஸ்கே போட்டிகளிலும் கவனிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்றால் அது தோனியின் பேட்டிங்தான். இரண்டு போட்டியிலும் தோனி 7வது இடத்தில்தான் களமிறங்கினார். அதிலும் தோனி கடைசி இடத்தில் இறங்கினாலும் சரியாக ஆடவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கேப்டன் தோனி திரும்பி வந்துவிட்டார். ஆனால் அவருக்கு உள்ளே இருந்த பேட்ஸ்மேன் தோனி இன்னும் மீண்டு வரவில்லை. அவர் இன்னும் முழு பார்மிற்கு திரும்பவில்லை. உண்மையான பேட்ஸ்மேன் தோனி திரும்பி வர இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்கிறார்கள்.

இனி இப்படித்தான்

இனி இப்படித்தான்

இனி பெரும்பாலான போட்டிகளில் தோனி கடைசியில்தான் இறங்குவார். 7 அல்லது 8வது இடத்தில்தான் தோனி களமிறங்குவார். அவர் முழுமையாக பார்ம் திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம், என்று கூறுகிறார்கள் . தோனியின் ஓய்விற்கு கூட இதுவே காரணம் என்கிறார்கள்.

எப்படி ஓய்வு

எப்படி ஓய்வு

இனியும் இந்திய அணியில் இருந்தால் அது இந்திய அணிக்குதான் பிரச்சனை. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் . இந்த பார்மில் இந்திய அணியில் விளையாடினால் அது இந்திய அணிக்கும் சிக்கல், தனக்கும் அவமானம் என்று தோனி கருதி இருக்கலாம் . அதனால் தான் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்று கூறுகிறார்கள்.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

இந்திய அணியில் பார்ம் அவுட் ஆன மூத்த வீரர்களை ஓய்வு பெற வைத்ததில் தோனியின் பங்கு அதிகம் என்று புகார் உள்ளது. சேவாக், டெண்டுல்கர், கம்பீர் என்று பலர் வெளியேற தோனி காரணம் என்று கூறினார்கள். அவர்களின் வயதை காரணம் காட்டி தோனி அவர்களை புறக்கணித்தார் என்று கூறப்பட்டது. தற்போது தோனி தனக்கும் அதேபோல் செய்துள்ளார்.

சைலன்ட் வெளியேற்றம்

சைலன்ட் வெளியேற்றம்

இதனால்தான் தோனி அமைதியாக வெளியேறி விட்டார் என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் இனியும் இருக்க வேண்டாம் என்று தோனி முடிவு செய்துவிட்டார். தனது பார்ம் மீதான நம்பிக்கை அவருக்கு இல்லாமல் இருக்கலாம். இரண்டு சிஎஸ்கே போட்டிகள் அதற்கு உதாரணம். அவர் எடுத்த முடிவு இந்திய அணியின் எதிர்காலத்திற்கு சரியானதுதான் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, September 24, 2020, 9:49 [IST]
Other articles published on Sep 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+