Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வன்மம்.. இவர்கள் தோனிக்கு எவ்வளவு துரோகம் செய்திருப்பார்கள்.. கம்பீரின் பேச்சு.. பெரும் பரபரப்பு!

துபாய்: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குறித்து கம்பீரின் தொடர் விமர்சனங்கள் தற்போது பெரிய அளவில் விவாத பொருளாக மாறி உள்ளது. கம்பீருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

2011 உலகக் கோப்பை தொடரில் இருந்த தோனிக்கும், கம்பீருக்கும் நிறைய மோதல்கள் நிலவி வருகிறது. தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு தோனிதான் காரணம் என்று கம்பீர் நினைத்துக் கொண்டு இருக்கிறார் .

இதனால் கிடைக்கிற இடங்களில் எல்லாம் தோனி குறித்து கம்பீர் கடுமையாக விமர்சனங்களை வைத்து உள்ளார்.தோனியை எப்போது எல்லாம் சீண்ட முடியுமோ அப்போதெல்லாம் கம்பீர் சீண்டி வருகிறார்.

சீண்டல்

சீண்டல்

முக்கியமாக கடந்த உலகக் கோப்பை போட்டியில் தோனியின் பேட்டிங்கை பல முறை கம்பீர் விமர்சனம் செய்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என்று கம்பீர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். தோனி இந்திய அணியில் இடம்பெறுவதை கம்பீர் எப்போதும் விரும்பியதே இல்லை.

மோசம்

மோசம்

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் தோனியை கம்பீர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். தோனியின் பேட்டிங் சரியாக இல்லை. தோனி ஒரு நல்ல கேப்டன் போல செயல்படவில்லை. தோனியிடம் பழைய பார்ம் இல்லை. அவர் பொறுப்பற்ற ரீதியில் ஆடுகிறார் என்று நிறைய விமர்சனங்களை கம்பீர் வைத்து இருக்கிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அதோடு தோனியின் கேப்டன்சி இந்த முறை சரியாக இல்லை. அவர் பேட்டிங் செய்ய பயப்படுகிறார். ஒரு கேப்டன் என்றால் தைரியமாக வந்து டாப் ஆர்டரில் சிஎஸ்கேவிற்காக பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் அந்த தைரியம், துணிச்சல் தோனிக்கு இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில்தான் தற்போது சஞ்சு சாம்சன் குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் புகழ்ந்ததை கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். நேற்று சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சனை காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாராட்டினார். அதில், சஞ்சு சாம்சன் இப்படி அதிரடியாக ஆடுவார் என்று எனக்கு முன்பே தெரியும். பல வருடமாக அவரை எனக்கு தெரியும். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பே சொல்லி இருக்கிறேன்.

தோனி இவர்தான்

தோனி இவர்தான்

நீதான் அடுத்த தோனி என்று அவருக்கு 14 வயது இருக்கும் போதே சொல்லி இருக்கிறேன் என சசி தரூர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த கவுதம் கம்பீர், சஞ்சு சாம்சன் அடுத்த தோனி எல்லாம் கிடையாது. யாரும் இன்னொரு வீரர் ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்திய கிரிக்கெட்டின் முதல் சஞ்சு சாம்சன், அவரை வேறு யாருடனும் ஒப்பிட கூடாது என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் வன்மம்

ஏன் வன்மம்

கம்பீரின் இந்த பதிலை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். நெட்டிசன்கள் பலர் கம்பீரை விமர்சனம் செய்து வருகிறார்கள். சஞ்சுவை ஒருவர் தோனியுடன் ஒப்பிடுகிறார் என்றால், அது அவரின் தனிப்பட்ட கருத்து. இதை கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம். தோனி மீது கம்பீருக்கு ஏன் இவ்வளவு வன்மம். தோனியின் கீழ் விளையாடிய போது, கம்பீர் தோனிக்கு கண்டிப்பாக துரோகம் செய்து இருப்பார்.

துரோகம்

துரோகம்

தோனியின் பெயரை கேட்டாலே இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று பலரும் கம்பீரை இணையத்தில் விமர்சனம் செய்துள்ளனர். சஞ்சு சாம்சானுக்கே தோனி என்றால் பிடிக்கும். தோனியின் இடத்தை நிரப்புவது கடினம் என்று சஞ்சு சாம்சனே பல இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். அப்படி இருக்கும் போது தோனியை ஏன் இவ்வளவு கோபத்தோடு கம்பீர் அணுகுகிறார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கம்பீர் நல்ல வீரர்

கம்பீர் நல்ல வீரர்

இந்திய அணியின் முக்கியமான தொடக்க வீரர்களில் ஒருவராக கம்பீர் இருந்தார். தோனியும் சிறப்பான கேப்டனாக இருந்தார். இரண்டு பேருமே ஜாம்பவான்கள். தோனி இந்தியாவின் பெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அப்படி இருக்கையில் தோனியுடன் புதிய கீப்பர் ஒருவரை ஒப்பிடுவதில் என்ன தவறு.. தோனி மீது கம்பீர் இவ்வளவு காழ்ப்புணர்வுடன் இருக்க கூடாது என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

Story first published: Monday, September 28, 2020, 19:05 [IST]
Other articles published on Sep 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+