For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"என்னை கூப்பிடவே இல்லை".. மறக்க முடியாமல் தவித்த கெயில்.. கோலி டீமை வெளுத்து வாங்கியது ஏன்.. பின்னணி

துபாய்: பெங்களூர் அணிக்கு எதிராக பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில் நேற்று ஆடிய ஆட்டம் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது.

யுனிவர்ஸ் பாஸ் இஸ் பேக்.. இணையம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது கூறி வரும் ஒரே வாசகம் இதுதான். ஐபிஎல் தொடரின் கிங்காக வலம் வந்த கெயில் மீண்டும் களத்திற்கு வந்துவிட்டார். எப்படி சென்றாரோ அப்படியே மீண்டும் திரும்பி வந்துள்ளார் கெயில்.

ஒன்றரை வருடமாக மைதானம் பக்கமே செல்லவில்லை என்றாலும் அதே பார்மோடு, கொஞ்சம் கூட வேகம் குறையாமல் நேற்று பஞ்சாப் அணிக்காக ஆடினார். பஞ்சாப் அணிக்காக நேற்று ஒன் டவுன் இறங்கிய கெயில் 45 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

நேற்று போட்டியில் அரை சதம் அடித்த இவர் 5 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார். ஒரு வருடம் கழித்து பேட்டிங் இறங்கிய கெயில் அதற்கான எந்த சுவடும் இன்றி முதல் போட்டியிலேயே மாஸ் ஆட்டம் ஆடினார். அரை சதம் அடித்துவிட்டு, தான்தான் பாஸ் என்பதை நிரூபித்தார். தனது பேட்டில் இருந்த தி பாஸ் வாசகத்தை உயர்த்தி காட்டி.. விமர்சனங்களுக்கு எல்லாம் ஒரே மேட்சில் பதிலடி கொடுத்தார்.

பார்ம் இல்லை

பார்ம் இல்லை

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை பஞ்சாப் அணி இவரை சரியாக பயன்படுத்தவே இல்லை. 2018ல் பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்தது. முதல் சில போட்டிகளில் பஞ்சாப் இவரை பயன்படுத்தியது. அதன்பின் பார்ம் அவுட் என்று கூறி இவரை அணி நிர்வாகம் உட்கார வைத்தது.

மீண்டும் என்ன

மீண்டும் என்ன

2019ல் கூட இவருக்கு பெரிய அளவில் பஞ்சாப்பில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அணியில் இருக்கும் மேக்ஸ்வெல் சரியாக ஆடவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கெயிலை பஞ்சாப் அணி பெரிதாக மதிக்கவில்லை. இந்த நிலையில் இத்தனை நாள் கழித்து கம்பேக் கொடுத்த கெயில் ஒரே போட்டியில் தன்னை நிரூபித்து உள்ளார்.

இதற்கு முன்

இதற்கு முன்

2017 ஐபிஎல் தொடர் வரை கிறிஸ் கெயில் பெங்களூர் அணிக்காகத்தான் விளையாடி வந்தார். ஆனால் 2018ல் நடந்த ஏலத்தில் கெயிலை அணியில் மீண்டும் எடுக்க பெங்களூர் அணி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் பஞ்சாப் அணியால் இவர் ஏலம் எடுக்கப்பட்டார்.பெங்களூர் அணிக்காக ஐபிஎல்லில் 152.7 ரன்கள் ஸ்டிரைக் ரேட் வைத்து இருந்தார் கெயில்.

ஆனாலும் எடுக்கவில்லை

ஆனாலும் எடுக்கவில்லை

ஆனாலும் மிகவும் சிறப்பாக விளையாடியும் கெயிலை பெங்களூர் அணி நிர்வாகம் அணிக்குள் எடுக்கவில்லை. அப்போது பேட்டி அளித்து இருந்த கெயில், அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு அதை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெங்களூர் அணி நிர்வாகம் எனக்கு போன் செய்து, அணியில் எடுப்பதாக கூறினார்கள்.

எடுக்கவில்லை

எடுக்கவில்லை

உங்களை கண்டிப்பாக ரீ- டெய்ன் செய்வோம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் என்னை அணியில் எடுக்கவே இல்லை. எனக்கு ஏன் அவர்கள் அப்படி போன் செய்து நம்பிக்கை கொடுக்க வேண்டும். என்னை எடுக்க விருப்பம் இல்லை என்றால் ஏன் கால் செய்ய வேண்டும்? ஒருமுறை அழைத்துவிட்டு.. அதன்பின் அவர்கள் என்னை அழைக்கவே இல்லை, என்று கெயில் குறிப்பிட்டு இருந்தார்.

பழி தீர்த்தார்

பழி தீர்த்தார்

2018ல் நடந்த அந்த சம்பவத்திற்கு தற்போது முக்கியமான நேரத்தில் கெயில் பழி தீர்த்துக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். பெங்களூர் எப்படியாவது பிளே ஆப் சென்றுவிட முடியுமா என்று போராடி வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் அந்த அணியின் தோல்விக்கு கெயில் முக்கிய காரணமாக மாறியுள்ளார். தன்னை புறக்கணித்தவர்களை வீழ்த்தி.. அதே இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

Story first published: Friday, October 16, 2020, 8:04 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
IPL 2020: Why Gayle is so concerned about playing well against RCB?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+