
வேறு என்ன காரணம்
அதன்பின் சிஎஸ்கே நிர்வாகம் உடன் ரெய்னா சண்டை போட்டார். சிஎஸ்கே உரிமையாளர் ஸ்ரீனிவாசன் உடன் ரெய்னா சண்டை போட்டார். அதனால்தான் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் என்றும் தகவல்கள் வந்தது. ஆனால் இது தொடர்பாக செய்திகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

டெர்மினேட்
இந்த நிலையில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் இருவரையும் சிஎஸ்கே டெர்மினேட் செய்ய போவதாக தகவல்கள் வந்தது. அதாவது இவர்கள் இருவரின் ஒப்பந்தங்களை நீக்க போவதாக தகவல்கள் வந்தது. இவர்களின் ஒப்பந்தங்களை சிஎஸ்கே நீக்கினால் மொத்தமாக இவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இவர்கள் வேறு அணியில் இதன் மூலம் ஏலம் எடுக்கப்படலாம்.

ஹர்பஜன் கோபம்
ஹர்பஜனை சிஎஸ்கே நீக்க இருப்பதாக தகவல் வந்த நிலையில்தான், அவர் தற்போது தோனியை கிண்டல் செய்துள்ளார் என்கிறார்கள். தோனி கடந்த போட்டியில் திணறி திணறி ஆடியதை ஹர்பஜன் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். நேற்று தோனியை, முன்னாள் வீரர் இர்பான் பதான் மறைமுகமாக விமர்சித்தார். அதில், சிலருக்கு வயது என்பது வெறும் எண்தான்.

ஆனால் என்ன
ஆனால் இன்னும் சிலருக்கு அது அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது தோனி போன்ற வீரர்கள் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் என்னை எல்லாம் வயதை காரணம் காட்டி ஓய்வு பெற வைத்துவிட்டனர் என்பது போல மறைமுகமாக தாக்கி இருந்தார்.

தோனியை கிண்டல்
இந்த நிலையில் இர்பான் சொல்வது சரிதான் என்று ஹர்பஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இர்பான் சொன்னதுடன் 10000000 ஒத்துப்போகிறேன் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார். தோனியை இதன் மூலம் ஹர்பஜன் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். ஹர்பஜனின் இந்த கோபத்திற்கு காரணம் சிஎஸ்கே எடுத்த டெர்மினேஷன் முடிவுதான் என்று கூறுகிறார்கள்.

கோபம்
சிஎஸ்கே தன்னை டெர்மினேட் செய்ய முடிவு எடுத்து இருப்பதால் ஹர்பஜன் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். தோனிதான் இதற்கு காரணம் என்று ஹர்பஜன் நினைக்கிறார். அதனால்தான் திடீர் என்று தோனியை ஹர்பஜன் சீண்டுகிறார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











