Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாமே கர்நாடக வீரர்கள்தான்.. இருந்த ஒரு தமிழரையும் நீக்கியது ஏன்?.. ராகுலின் அந்த முடிவு.. பின்னணி

துபாய்: பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் எடுத்த முக்கியமான முடிவு ஒன்று பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வரிசையாக வெற்றிபெற்று வந்த பஞ்சாப் அணியின் தோல்விக்கு கே.எல் ராகுலின் தவறான முடிவும் காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

15 ஓவர்கள் வரை போட்டி பஞ்சாப் அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தனர்.

ரோஹித் எப்படி

ரோஹித் எப்படி

ரோஹித் மட்டுமே ஒரு பக்கம் அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் இன்னொரு பக்கம் வரிசையாக அவுட்டானார்கள். 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததது. இதனால் அதிகபட்சம் 150 ரன்களை மும்பை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கடைசி ஐந்து ஓவரில் மட்டும் மும்பை அணி 89 ரன்கள் எடுத்தது. பாண்டியா 11 பந்தில் 30 ரன்களும், பொல்லார்ட் 20 பந்தில் 47 ரன்களும் எடுத்தனர். இவர்களின் அதிரடி காரணமாக மொத்தமாக ஆட்டம் தலைகீழாக மாறியது. இதனால் மும்பை 191 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

அதன்பின் இறங்கிய பஞ்சாப் அணியில் நிக்கோலஸ் பூரான் மட்டும் 44 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லா வீரர்களும் வரிசையாக அவுட்டானார்கள். இதனால் 20 ஓவரில் வெறும் பஞ்சாப் வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியின் இந்த தோல்விக்கு கே.எல் ராகுல் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம் என்று கூறுகிறார்கள். முக்கியமாக அவர் தமிழக வீரர் ஒருவரை அணியில் இருந்து நீக்கியதும் சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

நேற்று பஞ்சாப் அணியில் இருந்து முருகன் அஸ்வின் நீக்கப்பட்டார். கடந்த இரண்டு போட்டியில் முருகன் அஷ்வின் மொத்தமாக 4.3 ஓவர்கள் போட்டார். இதில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதோடு இவரின் எக்கனாமி ரேட் 8.22 ஆக உள்ளது. இப்படி இருந்தும் நேற்று நடந்த போட்டியில் இவரை கே.எல் ராகுல் எடுக்கவில்லை. கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் வேண்டும் என்று முருகன் அஸ்வின் நீக்கப்பட்டார்.

மாற்று எப்படி

மாற்று எப்படி

இவருக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் அணியில் எடுக்கப்பட்டார். இவர் நன்றாக பேட்டிங் செய்தாலும் கூட, அணியை வெற்றியை நோக்கி எல்லாம் கொண்டு செல்லவில்லை. முருகன் அஸ்வின் இருந்திருந்தால் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து மும்பை அணி எடுத்த டார்கெட்டை குறைத்து இருப்பார். நேற்று பஞ்சாப் பவுலிங்கில் யாரும் கேம் சேஞ்சராக அமையவில்லை.முருகன் இருந்திருந்தால் போட்டியே மாறி இருக்கும்.

மோசம்

மோசம்

அதிலும் பஞ்சாப் அணியில் ஏற்கனவே கோச் கும்ப்ளே கர்நாடகாவை சேர்ந்தவர். கே .எல் ராகுல் , மயங்க் அகர்வால், கருண் நாயர் எல்லோரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இருந்த ஒரே தமிழக வீரர் முருகன் அஸ்வினை நீக்கிவிட்டு.. அவரின் இடத்திலும் நேற்று கவுதம் என்ற கர்நாடக ஆல் ரவுண்டரை கே.எல் ராகுல் அணியில் எடுத்தது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

நல்ல வீரர்

நல்ல வீரர்

கவுதம் நல்ல வீரர்தான். ஆனால் மும்பை போன்ற பேட்டிங் அணிக்கு எதிராக வலுவான பவுலிங் தேவை. அப்படி இருக்கும் போது ஒரு நல்ல ஸ்பின் பவுலரை நீக்கியது தவறு. தவறான முடிவை எடுத்து உங்கள் தோல்விக்கு நீங்களே பாதை அமைத்துவிட்டீர்கள் என்று கே.எல் ராகுல் மீது பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

Story first published: Friday, October 2, 2020, 9:47 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+