Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈகோ மோதல்.. சிஎஸ்கேவில் அவ்வளவு நடந்தும் கூட.. ஒரு வார்த்தையும் சொல்லாத ரெய்னா.. கண்டுகொள்ளாத தோனி!

சார்ஜா: சென்னை அணி சரியான பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திணறி வரும் நிலையில் எல்லோரின் பார்வையும் தற்போது ரெய்னா பக்கம் திரும்பி உள்ளது.

ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் நேற்று நடந்த மோதலில் சென்னை தோல்வி அடைந்தது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் வென்று சென்னை இந்த தொடரை வெற்றியோடு தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி அடைந்துள்ளது. இதில் ராஜஸ்தான் 216 ரன்கள் எடுத்தது. சென்னை 200 ரன்கள் எடுத்தது.

பேட்டிங் எப்படி

பேட்டிங் எப்படி

நேற்று நடந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. சென்னை அணியில் டு பிளசிஸ் தவிர வேறு வீரர்கள் யாரும் பெரிதாக ஆடவில்லை. டு பிளசிஸ் மட்டும் 72 ரன்கள் எடுத்தார். மற்றபடி சென்னை அணியில் தோனி உட்பட அனைத்து வீரர்களும் மிக மோசமாக விளையாடினார்கள். இதனால் சிஎஸ்கே பெரிய விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

ராயுடு இல்லை

ராயுடு இல்லை

நேற்று போட்டியில் ராயுடு இல்லை என்பதால் சிஎஸ்கே மோசமாக திணறியது. அதேபோல் இன்னொரு பக்கம் ரூத்துராஜ் சரியாக ஆடவில்லை. இதனால் நேற்று பலரும் ரெய்னா அணியில் இல்லாதது குறித்து பேசத் தொடங்கினர். ரெய்னா ஒருவேளை இருந்திருந்தால் அணி இவ்வளவு திணறி இருக்காது. சென்னையின் பேட்டிங் ஆர்டர் இவ்வளவு மோசமாக இருந்திருக்காது என்று கூறினார்கள்.

சென்னை பேட்டிங்

சென்னை பேட்டிங்

ஆனால் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டரில் இவ்வளவு குழப்பம் இருக்கும் போதும் கூட ஏன் ரெய்னா அணிக்கு திரும்புவது குறித்து பேசவில்லை. அவரின் குடும்ப பிரச்சனையில் போலீஸ் வழக்கு எல்லாம் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இப்படி இருக்கும் போது ரெய்னா அணியில் இணையலாம். ஆனால் ஏன் வரவில்லை.

 ஈகோ மோதல்

ஈகோ மோதல்

ஏன் அணியில் இணைவது குறித்து ரெய்னா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்னதான் நடக்கிறது என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்படி என்றால் உண்மையில் ரெய்னாவிற்கும், தோனிக்கும் ஈகோ பிரச்சனையா? உண்மையில் பால்கனி தகராறு பெரிதாக வெடித்துவிட்டதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. தோனியும் போட்டிக்கு பின் கொடுத்த பேட்டியில் ரெய்னா குறித்து பேசவில்லை.

ரெய்னா

ரெய்னா

இரண்டு போட்டிக்கு பின்பும் தோனி ரெய்னா பற்றி பேசவில்லை. ரெய்னாவை தோனி கண்டுகொள்ளாதது போல தெரிகிறது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நேற்று ரெய்னா தோனி உட்பட எல்லோரையும் வாழ்த்தி டிவிட் செய்து இருந்தார். சென்னை அணியின் ஆட்டத்தை பாராட்டி இருந்தார். ஆனால் அணிக்கு திரும்புவது பற்றி அவர் பேசவில்லை.

Story first published: Wednesday, September 23, 2020, 17:02 [IST]
Other articles published on Sep 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+