Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு அது தெரியாது.. தோனியையே குழப்பிய ஸ்மித்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்.. பெரும் ஏமாற்றம்!

துபாய்: நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஸ்டிவ் ஸ்மித் செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

நேற்று ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது.நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே மிக மோசமாக ஆடி வெறும் 125 ரன்கள் எடுத்தது.

இதை எளிதாக சேசிங் செய்த ராஜஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதனால் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு ஏறத்தாழ பறிபோய்விட்டது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இந்த போட்டியில் தொடக்கத்தில் ராஜஸ்தானின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பினார்கள். தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி சிஎஸ்கே போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 19, உத்தப்பா 4, சாம்சன் 0 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். இதனால் ஸ்மித், பட்லர் இரண்டு பேரும் களமிறங்கி பொறுமையாக ஆடி வந்தனர்.

பொறுமை

பொறுமை

முக்கியமாக ஸ்மித் சிஎஸ்கேவின் ஸ்பீட் பவுலர்கள் பந்தில் மோசமாக திணறினார். இதனால் அவரின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்று தோனி அடுத்தடுத்து ஸ்பீட் பவுலர்களுக்கு மட்டும் மாற்றி மாற்றி பவுலிங் கொடுத்தார். இதில் ஜோஸ் ஹஸல்வுட் ஓவரில் ஸ்மித் எல்பிடபிள்யூ ஆனது போல இருந்தது. சரியான லைனில் குத்தி, பந்து ஸ்டம்பை நோக்கி சென்றது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் நேற்று நடுவர் இதற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். அதேபோல் பவுலர் ஹஸல்வுட்டும் ஸ்மித் அவுட்டா என்பது தெரியாமல் சந்தேகமாக இருந்தார். முதலில் தோனி இதில் ரிவ்யூ கேட்க விருப்பப்படவில்லை. ஆனால் திடீர் என்று ஸ்மித் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, களத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.

மெதுவாக நடந்தார்

மெதுவாக நடந்தார்

மெதுவாக கிரீஸை விட்டு ஸ்மித் நடந்து செல்ல தொடங்கினார். ஸ்மித் இப்படி செல்வதை பார்த்து குழம்பி போன தோனி, ஒருவேளை இது விக்கெட்டாக இருக்குமோ என்று நினைத்து தோனி ரிவ்யூ கேட்டார். ஆனால் ரிவியூவில் பந்து பேடில் படுவதற்கு முன் பேட்டில் பட்டது தெரிந்தது. இதனால் அது எல்பிடபிள்யூ இல்லை என்று உறுதியானது. தோனி தேவையில்லாமல் ரிவ்யூ கேட்டு, அதை இழந்தார்.

எப்படி

எப்படி

ஸ்மித் நடந்து சென்றதை பார்த்து தோனி குழம்பி போய் ரிவ்யூ கேட்டார். இந்த நிலையில் தான் நடந்து சென்றது ஏன் என்று ஸ்மித் விளக்கி உள்ளார். அதில், எனக்கு பந்து பேட்டில் பட்டதை உணர முடியவில்லை. அல்ட்ரா எட்ஜில்தான் தெரிந்தது. எனக்கு அது தெரியாது. நான் நேராக காலில் பட்டது, என்றுதான் நினைத்தேன். அதனால்தான் வெளியேற நினைத்தேன், என்று ஸ்மித் விளக்கி உள்ளார்.

Story first published: Tuesday, October 20, 2020, 14:37 [IST]
Other articles published on Oct 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+