Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த கண் சிமிட்டலுக்கு என்ன அர்த்தம்? தோனி கொடுத்த ரியாக்சன்.. நடுவர் முடிவை மாற்ற இதுதான் காரணமா?

துபாய்: நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சரத்துல் தாக்கூர் பவுலிங் செய்த 19வது ஓவரில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே பிளே ஆப் செல்வது சந்தேகம் ஆகியுள்ள நிலையில் இனி வரும் போட்டிகளில் எல்லாம் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய வெற்றி சிஎஸ்கேவிற்கு இதற்கான உத்வேகத்தை கொடுத்துள்ளது.

நேற்று எப்படி

நேற்று எப்படி

நேற்று சிஎஸ்கே பவுலிங் சிறப்பாக இருந்தாலும் கூட 15 ஓவருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் திசை மாறியது. ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ரஷீத் கான் இருவரும் களத்தில் அதிரடியாக ஆடி வந்தனர். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் ஆட்டம் கைவிட்டு போய் விடுமோ என்று சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் 19வது ஓவரை வீச சரத்துல் தாக்கூர் களத்திற்கு வந்தார்.

களத்திற்கு வந்தார்

களத்திற்கு வந்தார்

19வது ஓவரில் ரஷீத் கான் பேட்டிங் செய்து வந்தார். அந்த ஓவரின் 2வது பந்தை ரஷீத் கான் அடிக்க முயன்றார். ஆனால் சரத்துல் தாக்கூர் அந்த பந்தை மிகவும் அகலமாக ஆப் திசையில் வீசினார். பந்து வைட் போல இருந்த காரணத்தால் களத்தில் இருந்த நடுவர் வைட் கொடுக்க சென்றார். ஆனால் சரத்துல் தாக்கூர் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார்.

கத்தினார்

கத்தினார்

அதன்பின் தோனியும் கோபமாக நடுவரை பார்த்து கத்தினார். இதனால் வைட் கொடுக்க சென்ற நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். கிட்டத்தட்ட நடுவரை மிரட்டி முடிவை மாற்ற வைத்தது போல நேற்று இந்த சம்பவம் பார்க்கப்பட்டது. அதன்பின் காண்பிக்கப்பட்ட ரிப்ளேவில் பந்து வைட் கோட்டிற்கு வெளியே சென்றது தெரிய வந்தது.. பந்து வைட் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி

எப்படி

ஆனாலும் நடுவர் நேற்று வைட் கொடுக்கவில்லை. இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். தோனி எப்படி நடுவரை மிரட்டலாம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் நேற்று தோனி நடுவரிடம் கோபமாக கத்திய போது.. நடுவரை பார்த்து கண்ணை சிமிட்டினார். இதை எல்லாம் சர்ச்சையாக்கி தோனிக்கு எதிராக இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்.

கேள்விகள்

கேள்விகள்

தோனி ஏன் கண் சிமிட்டினார்? தோனி ஏன் நடுவரை மிரட்டினார்? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். சிஎஸ்கேவை தடை செய்ய வேண்டும் என்றும் கூட கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் நடுவர் ஏன் தனது முடிவை மாற்றினார் என்பது குறித்தும் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடுவர் தானாக முடிவை மாற்றவில்லை.. 3ம் நடுவரிடம் ஹெட் போனில் பேசி உள்ளார்.

பேசிவிட்டு

பேசிவிட்டு

மூன்றாம் நடுவரிடம் ஹெட் போனில் பேசிவிட்டுதான் முடிவை மாற்றி உள்ளார் என்று கூறுகிறார்கள். கேப்டன்களின் கோபத்தை பார்த்து நடுவர்கள் முடிவை எல்லாம் மாற்ற மாட்டார்கள். இதனால் தோனி மீது குற்றச்சாட்டு வைப்பது தவறு. முடிவை மாற்றியதற்கு முழுக்க முழுக்க நடுவர் மட்டுமே பொறுப்பு, தோனி பொறுப்பு கிடையாது என்றும் வாதம் வைத்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 12:33 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+