Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம் அந்த தமிழக வீரர்.. எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார்.. கேகேஆர் அணியால் நேர்ந்த கதி.. மோசம்!

துபாய்: கொல்கத்தா அணியின் இளம் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வான இவர் தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்த மாதம் கிரிக்கெட் தொடரில் ஆட இருக்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய அணி அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இதில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இளம் வீரர்கள் சிலர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

ஏன் நீக்கம்

ஏன் நீக்கம்

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். இவர் இந்திய டி 20 அணியில் இணைக்கப்பட்டு இருக்கிறார்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் வருண் சக்ரவர்த்தி இப்போது அல்ல.. இந்த ஐபிஎல் தொடர் முழுக்க காயம் காரணமாக கஷ்டப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தொடரின் பாதியிலேயே இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி பிசிசிஐ அமைப்பிற்கு கொல்கத்தா அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

தெரிவிக்கவில்லை

தெரிவிக்கவில்லை

வீரர்கள் காயம் அடைந்தால் அதை தெரிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் கூட, வருண் சக்கரவர்த்தியின் காயம் குறித்து கொல்கத்தா அணி நிர்வாகம் பிசிசிஐ அமைப்பிற்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு காயம் இருப்பது தெரியாமல்தான் பிசிசிஐ அமைப்பு.. இவரை அணியில் எடுத்துள்ளது.

கனவு

கனவு

இதனால் இந்திய அணியில் ஆடும் கனவோடு வருண் சக்ரவர்த்தி இருந்துள்ளார். ஆனால் வருண் சக்ரவர்த்தி உடலை சோதித்த பிசிசிஐ அவர் ஆடும் நிலையில் இல்லை என்பதை உறுதி செய்து, அவரை அணியில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் இந்திய அணிக்கு ஆடும் வருண் சக்ரவர்த்தியின் கனவு கலைந்து போய் உள்ளது.

கேகேஆர் மோசம்

கேகேஆர் மோசம்

இது முழுக்க முழுக்க கேகேஆர் அணியின் தவறுதான் என்று கூறுகிறார்கள். கேகேஆர் அணிதான் வருண் சக்ரவர்த்தியை காயத்தோடு ஆட வைத்துள்ளது. அவரின் காயம் குறித்தும் பிசிசிஐ அமைப்பிற்கு தெரிவிக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இதுதான் தற்போது இவரின் நீக்கத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

Story first published: Monday, November 9, 2020, 22:11 [IST]
Other articles published on Nov 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+