Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை அணியில் எடுத்தால் தோல்விதான்.. சிஎஸ்கேவிற்கு பறக்கும் வார்னிங்.. தோனி எடுக்க போகும் முடிவு!

சென்னை அணியின் முக்கியமான வீரர் ஒருவரை அணியில் எடுக்க வேண்டும், அவரின் பார்ம் சரியில்லை, உடனே அவரை நீக்குவது சிறந்தது என்று சிஎஸ்கே அணிக்கு பலர் அறிவுரை வழங்கி வருகிறார்கள். சென்னைக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் சார்ஜாவில் இன்று போட்டி நடக்கும் நிலையில், அணிக்குள் மாற்றம் நடக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் கொஞ்சம் கூட கணிக்க முடியாத அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவெடுத்து உள்ளது. வயதான அணி, டாடி ஆர்மி என்று சென்னை அணியை எல்லோரும் கிண்டல் செய்து வந்த நிலையில், மிகவும் அதிரடியாக சென்னை தனது முதல் போட்டியில் வென்றது.

மிகவும் வலுவான மும்பை அணியை எளிமையாக வீழ்த்தியது சென்னை. ஆனால் சென்னை அணியில் சில விஷயங்கள், அணிக்கு எதிராக இருந்தது.

 என்ன விஷயம்

என்ன விஷயம்

கடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னையின் வெற்றிக்கு காரணம் என்று பார்த்தால் அது அம்பதி ராயுடு மற்றும் டு பிளசிஸ் மட்டும்தான். இவர்கள் இருவரும் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிக்கு வழி வகுத்தனர். அதிலும் அம்பதி ராயுடு 71 ரன்களும் டு பிளசிஸ் மொத்தம் 58 ரன்களும் எடுத்தனர். இது சென்னை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

வெற்றிக்கு வழி வகுத்தது

வெற்றிக்கு வழி வகுத்தது

ஆனால் சென்னை அணியில் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. முரளி விஜய் மற்றும் வாட்சன் இருவரும் சரியாக ஆடவில்லை. வாட்சன் பொதுவாக தொடக்கத்தில் திணற கூடியவர். சீசன் செல்ல செல்ல, அவர் பார்மிற்கு திரும்புவதே வழக்கம். ஆனால் அந்த போட்டியில் முரளி விஜய் மிக மோசமாக சொதப்பினார். வெறும் 1 ரன்களில் அவுட்டாகி இவர் சென்றார்.

கேள்வி

கேள்வி

டெஸ்ட் வீரரான இவரை டி 20 அணியில் விளையாட வைப்பது ஏன் என்று அப்போதே கேள்வி எழும்பி இருந்தது. இதுவரை சிஎஸ்கே அணியில் இவர் விளையாடிய போட்டிகளிலும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இதனால் இவரை அணியில் வைத்து இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுந்துள்ளது . அதேபோல் இவரின் பீல்டிங்கும் கடந்த போட்டியில் பெரிய அளவில் எடுபடவில்லை.

பீல்டிங் எப்படி

பீல்டிங் எப்படி

இந்த நிலையில் இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தோனிக்கு நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் அவர் தேவை இல்லை. இவரை எடுத்துவிட்டு, டு பிளசிஸ் முதலில் இறங்க வேண்டும். அதன்பின் ஒன் டவுன் இடத்தில் ரித்துராஜ் இறங்க வேண்டும். இப்படி செய்தால் டீம் நன்றாக இருக்கும். வரிசையாக வலுவான வீரர்கள் இருப்பார்கள் என்று நெட்டின்சன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

அதோடு சென்னை அணியின் நிர்வாகமும், இதே யோசனையில்தான் இருக்கிறது. முரளி விஜயை அணியில் வைத்து இருப்பது அவசியமா என்று கேட்டு உள்ளனர். ஆனால் இவரை நீக்குவது குறித்து தோனி இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை. ரித்துராஜ் முழு உடல் தகுதியோடு இருந்தால் அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, September 22, 2020, 17:30 [IST]
Other articles published on Sep 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+