தோனிதான் தடுக்கிறாரா?.. ஹைதராபாத் வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. மாட்டிக்கொண்ட சிஎஸ்கே.. என்ன நடந்தது?
துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் இருந்து புவனேஷ்வர் குமார் வெளியேறி உள்ள நிலையில் அவருக்கான மாற்று வீரரை ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2020 தொடர் இந்த முறை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லி, ராஜஸ்தான் போன்ற சின்ன சின்ன அணிகள் ஆடும் போட்டிகள் கூட இந்த முறை சுவாரசியமாக உள்ளது.
ஒரு பக்கம் ஐபிஎல் தொடர் சுவாரசியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் முக்கியமான வீரர்கள் இந்த தொடரில் காயம் அடைவதும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இஷாந்த் சர்மா, மிட்சல் மார்ஷ் போன்ற வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியவில்லை

காயம்
ஒரு பக்கம் ஹைதராபாத் வீரர் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக மொத்தமாக ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் வெளியேறி உள்ளார். இவருக்கு போட்டிக்கு நடுவே காலில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்தே மார்ஷ் வெளியேறினார். அதேபோல் இஷாந்த் சர்மா காயம் காரணமாக டெல்லி அணிக்காக இன்னும் விளையாடாமல் உள்ளார்.

வேறு என்ன
இன்னொரு பக்கம் அம்பதி ராயுடு காயம் காரணமாக, இரண்டு போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தற்போது மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் வந்துள்ளார். நிலைமை இப்படி இருக்க ஹைதராபாத் அணியின் இன்னொரு முக்கிய வீரரான புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் இடுப்பு மற்றும் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை
சென்னைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் பாதியில் வெளியேறினார். அதன்பின் மொத்தமாக ஐபிஎல் தொடரில் இருந்தே புவனேஷ்வர்குமார் வெளியேறினார். நேற்றுதான் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் ஒரே நாளில் புவனேஷ்வர்குமாருக்கு மாற்று வீரரை ஹைதராபாத் அறிவித்துள்ளது.

யார் வருகிறார்
பிரித்வி ராஜ் யார்ரா என்று ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த லெப்ட் ஆர்ம் பவுலரை ஹைதராபாத் தங்கள் அணியில் எடுத்துள்ளது. ஒரே நாளில் இந்த வீரர் அணிக்குள் வந்துள்ளார். இங்குதான் சிஎஸ்கே மீது கேள்விகள் வைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் அணி ஒரே நாளில் மாற்று வீரரை அணியில் எடுக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணியால் ஒரு மாதம் ஆகியும் ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை அறிவிக்க முடியவில்லை என்று கேள்விகள் வைக்கப்படுகிறது.

விலகிவிட்டனர்
மற்ற அணிகள் ஒரே நாளில் மாற்று வீரர்களை அறிவிக்கும் போது ஏன் சிஎஸ்கே இன்னும் ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக, ரெய்னா, ஹர்பஜன் இல்லாமல் சிஎஸ்கே திணறுகிறது. அப்படி இருக்கும் போது மாற்று வீரர்களை அறிவித்தால் என்ன தவறு என்று சிஎஸ்கேவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

சிக்கியது
தற்போது சிஎஸ்கே அணி தனது ரசிகர்களிடம் வசமாக சிக்கி உள்ளது. மாற்று வீரர்களை அறிவிக்க கூடாது என்று தோனிதான் தடுக்கிறாரா என்றும் பலர் சிஎஸ்கேவிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். ரெய்னா இல்லாத காரணத்தால் சிஎஸ்கேவின் ஒன் டவுனில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஹர்பஜன் இல்லாமல் ஸ்பின் பவுலிங்கும் திணறுகிறது. ஆனால் இவர்களுக்கான மாற்றை சிஎஸ்கே அறிவிக்கவில்லை.

கேள்வி எழுப்பினார்கள்
ரெய்னா உடன் இருக்கும் நட்பு காரணமாக அவருக்கான மாற்று வீரரை அறிவிக்க விடாமல் தோனிதான் தடுக்கிறார் போல என்றும் சிலர் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்றாக இந்திய வீரர்கள் சிஎஸ்கே அணிக்குள் வந்தால் அது பெரிய திருப்பமாக இருக்கும். ஆனால் சிஎஸ்கே ஏனோ இன்னும் இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களை அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications