Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியை விடுங்கள்.. 12 வருடத்தில் முதல் முறை.. சிஎஸ்கேவிற்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்.. பின்னணி

துபாய்: சிஎஸ்கே அணி இந்த முறை ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகள் காரணமாக மிக மோசமான அணியாக உருவெடுத்து உள்ளது.

சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட மோசமாக டெல்லியிடம் தோல்வி அடைந்தது.

நேற்று முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய டெல்லி கடைசி ஓவரில் அதிரடி காட்டி 19.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

என்ன

என்ன

இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே சரியாக ஆடவில்லை. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமான சரிவை சந்தித்தது. ராஜஸ்தான்,டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா என்று சின்ன சின்ன அணிகளுக்கு எதிராக வரிசையாக தோல்வி அடைந்தது.

பஞ்சாப்

பஞ்சாப்

அதன்பின் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. ஆனால் தற்போது மீண்டும் சென்னை அணி டெல்லியிடம் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் சிஎஸ்கே ஆடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெற்றுள்ளது. மீதம் இருக்கும் 6 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

பொதுவாக ஒரு அணி ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்ல வேண்டும் என்றால் 14 போட்டிகளில் குறைத்து 7-8 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். நல்ல ரன் ரேட் இருந்தால் 7 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் செல்ல முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே மீதம் இருக்கும் 5 போட்டிகளில் 5லும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

கட்டாயம்

கட்டாயம்

5 போட்டியிலும் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆப் செல்ல முடியும். ஆனால் இதுதான் தற்போது சந்தேகம் ஆகியுள்ளது. டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளே ஆப் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் பெங்களூர் மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. நான்காவது இடத்தை பிடிக்க போகும் அணி எது என்றுதான் கேள்வி எழுந்துள்ளது.

அந்த அணி

அந்த அணி

தற்போது நான்காவது இடத்தை பிடிப்பதற்காக சிஎஸ்கே, கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் ஹைதராபாத் அல்லது கொல்கத்தா பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சிஎஸ்கே இனி விளையாட உள்ள 5 போட்டிகளில் பெங்களூர், மும்பை போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்கிறது.

ஒரு போட்டி

ஒரு போட்டி

இதில் ஒரே ஒரு போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆப் வாய்ப்பை இழக்கும். இதன் காரணமாக கண்டிப்பாக இந்த முறை சிஎஸ்கே பிளே ஆப் செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். இதுவரை சிஎஸ்கே விளையாடிய 10 ஐபிஎல் சீசன்களில் அனைத்திலும் பிளே ஆப் சென்றுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் செல்லுமா என்பதே சந்தேகமான விஷயமாக மாறியுள்ளது.

Story first published: Sunday, October 18, 2020, 12:30 [IST]
Other articles published on Oct 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+