Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று எடுக்கும் அந்த ஒரு முடிவு.. தோனியின் எதிர்காலத்தையே மாற்றும்.. சிஎஸ்கே திட்டம்.. மாஸ் பின்னணி!

துபாய்: பெங்களூர் அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவை சென்னை இந்த முறை சந்தித்து உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 11 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே 8 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சிஎஸ்கேவின் சீனியர் வீரர்கள் எல்லோரும் இந்த சீசனில் மோசமாக சொதப்பி உள்ளனர்.

சொதப்பல்

சொதப்பல்

சிஎஸ்கே அணி எப்போதும் சீனியர் வீரர்களை நம்பியே களமிறங்கும். 2018ல் மட்டுமின்றி அதற்கு முன்பும் கூட சிஎஸ்கே அணியில் பல சீனியர் வீரர்கள் ஆடி இருக்கிறார்கள். பல வருடம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு சீனியர் வீரர்களே காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இந்த வருடம் சிஎஸ்கே அணியில் சீனியர் வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை.

ஏன்

ஏன்

சீனியர் வீரர்கள் எல்லோரும் மோசமாக சொதப்பிவிட்டனர். சிஎஸ்கேவில் சீனியர் வீரர்கள் இப்படி சொதப்பிய பின்பும் கூட தோனி அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தார்.ஜாதவ், வாட்சன் போன்ற வீரர்களுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தார். தோனியின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அணிக்குள் தோனி பாகுபாடு காட்டுகிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

இதற்கு விளக்கம் அளித்த தோனி, இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால்தான் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த விளக்கம் காரணமாக தோனி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். தொடர் விமர்சனத்திற்கு பின் தோனி சிஎஸ்கே அணிக்குள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். என். ஜெகதீசன், ரூத்துராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர்கள் இருவரும் கடந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. இருவரும் டக் அவுட் ஆகிவிட்டனர். இதனால் இன்று நடக்கும் போட்டியில் இவர்கள் இருவரும் ஆடுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது இவர்கள் இருவருக்கும் தோனி மீண்டும் வாய்ப்பு கொடுப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றதும் இவர்களின் வாய்ப்பை தோனி பறித்து விடுவாரே என்று கேள்வி எழுந்துள்ளது.

முடிவு

முடிவு

இன்று தோனி எடுக்கும் முடிவை பொறுத்துதான் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் எதிர்காலமும் இன்றைய தினத்தை பொறுத்தே இருக்கிறது. இன்று இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் என்றால் சிஎஸ்கே இனியும் மூத்த வீரர்களை நம்பி இருக்காது என்று முடிவு செய்யலாம். ஆனால் மீண்டும் மூத்த வீரர்கள் அணிக்குள் வந்தால்..சிஎஸ்கே எப்போதும் போல மூத்த வீரர்களை சார்ந்துதான் இருக்கிறது என்று முடிவிற்கு வரலாம்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இன்று தோனி எடுக்கும் முடிவு மூலம் அடுத்த வருடம் சிஎஸ்கே அணி எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். அடுத்த வருடம் சிஎஸ்கே அணி அதிக இளம் வீரர்களை கொண்டு இருக்குமா ? அல்லது இதேபோல் மூத்த வீரர்களை நம்பி இருக்குமா என்று தெரிந்துவிடும். சிஎஸ்கே அணிக்குள் தோனியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதும் இன்றைய போட்டிக்கு பின் தெரிந்துவிடும். தோனி ஒரு கேப்டனாக யாரை நம்பி இருப்பார் என்று இன்று பார்க்கலாம்.

Story first published: Sunday, October 25, 2020, 10:34 [IST]
Other articles published on Oct 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+