Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை எளிதாக தூக்கிவிட முடியாது.. சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட அந்த குழப்பம்.. தோனி கையில்தான் முடிவு!

துபாய்: சிஎஸ்கே அணியில் முக்கியமான ஒரு வீரரை அடுத்த சீசனில் வைத்துக் கொள்ளலாமா அல்லது நீக்கலாமா என்று குழப்பம் எழுந்து உள்ளது.

2020 ஐபிஎல் சீசன் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடிக்க போகும் அணி எது என்பதற்கான கேள்விகள் எழுந்துள்ளது. முக்கிய அணிகள் தற்போது பிளே ஆப் மீது கவனம் செலுத்தி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி அடுத்த தொடர் மீது கவனம் செலுத்தி உள்ளது.

அடுத்த சீசன்

அடுத்த சீசன்

இந்த சீசன் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்துள்ளது. இதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை சிஎஸ்கே அணி இப்போதே செய்ய தொடங்கி உள்ளது. அடுத்த வருடம் சிஎஸ்கே அணிக்குள் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது.

விவாதம் எப்படி

விவாதம் எப்படி

இதை பற்றி தோனியே வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் நன்றாக ஆடி உள்ளனர். அடுத்த வருடம் சிஎஸ்கே அணிக்காக ஆட போகும் வீரர்கள் யார் என்பது குறித்த ஐடியா வந்துள்ளது. சில வீரர்களின் ஆட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது, என்று தோனி குறிப்பிட்டு இருந்தார்.

உறுதி

உறுதி

அதன்படி சிஎஸ்கே அணியில் தற்போது ஜடேஜா, சாம் கரன், ரூத்துராஜ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். கேப்டனாக தோனி நீடிப்பார். அணியில் கண்டிப்பாக சாகர் இடம் பிடிப்பார். அதே சமயம் வாட்சன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இல்லை என்பதும் உறுதியாகி விட்டது. இதுதான் சிஎஸ்கே அணிக்காக வாட்சன் ஆடும் கடைசி தொடர் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அணிக்குள் இருக்கும் இன்னொரு மூத்த வீரர் டு பிளஸிஸை அணியில் வைத்து இருப்பதா வேண்டாமா என்று கேள்வி எழுந்துள்ளது. டு பிளஸிஸுக்கும் வயதாகிவிட்டது. இந்த தொடரில் கடைசி கட்டத்தில் அவர் சொதப்பினாலும் தொடக்கத்தில் நன்றாக ஆடினார். இந்த சீசனில் லீடிங் ரன் ஸ்கோர் வீரர்களில் டு பிளசிஸ் இருக்கிறார்.

நீக்கம்

நீக்கம்

இதனால் இவரை அணியில் வைத்து இருப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருக்கிறது. அணியில் டு பிளசிஸ் தொடர் வேண்டும் என்று தோனி நினைக்கிறார். ஆனால் இவருக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டு வரலாம், இவருக்கு ஏற்கனவே வயதாகிவிட்டது, அடுத்த வருடம் இவர் பார்மில் இருப்பாரா என்று தெரியாது என சிஎஸ்கே அணியில் சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்.

வாட்சன் முடிவு

வாட்சன் முடிவு

வாட்சன் விஷயத்தில் சிஎஸ்கே அணி தெளிவாக முடிவு எடுத்துவிட்டது. ஆனால் டு பிளசிஸ் விஷயத்தில் அப்படி இன்னும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் குழம்பி வருகிறது. இதில் தோனி எடுக்கும் முடிவே இறுதியானது.. விரைவில் அவர் முக்கிய முடிவை எடுப்பார் என்கிறார்கள்.

Story first published: Saturday, October 31, 2020, 9:13 [IST]
Other articles published on Oct 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+