"காலை வரை சரியாகவில்லை".. போட்டிக்கு முன் சிஎஸ்கேவிற்கு காத்திருக்கும் பெரிய சிக்கல்..என்ன நடக்குமோ?
துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர் ஒருவர் விளையாடுவாரா மாட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை சிஎஸ்கே வெற்றியோடுதான் தொடங்கியது. மும்பைக்கு எதிராக நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது.
அதன்பின் நடந்த ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

சிஎஸ்கே
சிஎஸ்கே அணியில் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வரும் வீரர் டு பிளசிஸ்தான். சிஎஸ்கே அணி வெல்கிறதோ, இல்லையோ டு பிளசிஸ் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வந்தார். சிஎஸ்கேவின் மொத்த பேட்டிங் ஆர்டரும் மொத்தமாக சொதப்பிய போதும் கூட டு பிளசிஸ் தனியாக இரும்பு போல சிஎஸ்கே அணிக்காக உறுதியாக ஆடி வந்தார்.

வெற்றி
கடந்த சீசனில் இவருக்கு சரியாக பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக டு பிளசிஸ் மாறியுள்ளார். சிஎஸ்கே அணி பெரிய அளவில் டு பிளசிசை நம்பி இருக்கிறது. இவரின் பேட்டிங்கை நம்பி அணி பெரிய அளவில் திட்டங்களை வகுத்து வருகிறது.

என்ன பிரச்சனை
இந்த நிலையில்தான் டு பிளசிஸ் காலில் ஏற்பட்ட காயம் சிஎஸ்கேவிற்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவரின் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் இவர் முட்டியில் அதே இடத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டிக்கு பின் காலில் கட்டு போட்டபடிதான் டு பிளசிஸ் நடந்தார்.

முடியவில்லை
டு பிளசிஸ் இரண்டு மேட்சிலும் ரன்னிங் ஓடும் போது மிகவும் சிரமப்பட்டார். அதிலும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவர் ரன் அவுட் ஆக இவர் காலில் ஏற்பட்ட காயம்தான் காரணமாக இருந்தது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் டு பிளசிஸ் ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இன்று காலை வரை அவரின் காலில் காயம் சரியாகவில்லை.

சின்ன காயம்
இதனால் அவர் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.அதே சமயம்.. அது சின்ன காயம்தான். பெரும்பாலும் டு பிளசிஸ் இன்று விளையாட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை டு பிளசிஸ் விளையாடவில்லை என்றால்.. அவருக்கு பதிலாக மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்று கேள்விகள் எழுந்துள்ளது. டு பிளசிஸ் காயம் காரணமாக விளையாடவில்லை என்றால்.. சிஎஸ்கே என்ன செய்யும் என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications