For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கம்பேக் கொடுக்கும் 2019 மேட்ச் வின்னர்.. சிஎஸ்கேவை மீட்க போகும் ரட்சகன்..அணியில் மிகப்பெரிய மாற்றம்?

துபாய்: சிஎஸ்கே அணியில் இன்று மிக முக்கியமான வீரர் அணியில் சேர வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இந்த மாற்றம் மட்டும் நடந்தால் சிஎஸ்கேவிற்கு அது பெரிய அளவில் பயன் அளிக்கும் என்று கூறுகிறார்கள்.

எங்கள் அணியில் ஸ்பின் பவுலிங் சரியாக இல்லை.. எப்போதும் நாங்கள் ஸ்பின் பவுலிங்கை நம்பித்தான் களமிறங்குவோம். எங்களுக்கு எப்போதும் ஸ்பின் பவுலர்கள்தான் விக்கெட் எடுப்பார்கள்.

ஆனால் இந்த சீசனில் பெரிய அளவில் ஸ்பின் பவுலிங் பலன் அளிக்கவில்லை. இந்த முறை சிஎஸ்கேவின் மேட்ச் வின்னர்களாக ஸ்பின் பவுலர்கள் இல்லை என்று சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் குறிப்பிட்டு இருந்தார். சிஎஸ்கேவின் தோல்விக்கு ஸ்பின் பவுலர்களும் ஒருவகையில் காரணம் என்று பிளமிங் குறிப்பிட்டு இருந்தார்.

எப்படி

எப்படி

இதற்கு முன் சீசன்களில் எல்லாம் சிஎஸ்கேவிற்கு ஸ்பின் பவுலர்கள்தான் கைகொடுத்தனர். அஸ்வின் இருந்த காலத்தில் சிஎஸ்கேவிற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும்தான் விக்கெட்டுகளை எடுத்தனர்.2018க்கு பிறகு சிஎஸ்கேவிற்கு இம்ரான் தாஹிர், ஹர்பஜன் இருவரும்தான் விக்கெட்டுகளை எடுத்தனர். அதேபோல் ஜடேஜாவும் அதிக விக்கெட்டுகளை எடுத்தனர்.

2019 எப்படி

2019 எப்படி

அதேபோல் 2019 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முழு முதல் முதற்காரணமாக இம்ரான் தாஹிர்தான் இருந்தார். அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை இம்ரான் தாஹிர்தான் எடுத்தது. மும்பை, ஹைதராபாத் போன்ற வலுவான அணிகளை கூட எளிதாக வென்று சிஎஸ்கே பைனல் செல்வதற்கு இம்ரான் தாஹிர்தான் காரணமாக இருந்தார். ஆனால் இந்த சீசனில் இம்ரான் தாஹிரால் விளையாட முடியவில்லை.

ஏன் விளையாடவில்லை

ஏன் விளையாடவில்லை

இந்த சீசனில் இம்ரான் தாஹிரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கேவில் ஏற்கனவே டு பிளசிஸ், வாட்சன் , பிராவோ, சாம் கரன் என்று நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதனால் தற்போது இம்ரான் தாஹிர் அணியில் இடம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார். கடந்த 7 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இம்ரான் தாஹிர் விளையாடவில்லை.

சாம் கரன்

சாம் கரன்

தற்போது இம்ரான் தாஹிரை அணியில் மீண்டும் எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. சரியான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியாமல் சிஎஸ்கே திணறும் நிலையில், அணிக்குள் இம்ரான் தாஹிர் வந்தால் கண்டிப்பாக சிஎஸ்கே மீண்டும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்க முடியும். அதேபோல் எதிரணியை பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்த முடியும்.

நீக்கம்

நீக்கம்

இன்னொரு பக்கம் சிஎஸ்கேவில் இன்று சாம் கரன் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். சாம் கரன் முதல் போட்டியில் கொஞ்சம் நன்றாக ஆடினார். ஆனால் அதன்பின் எந்த போட்டியிலும் இவரின் பேட்டிங், பவுலிங் எதுவும் சரியாக இல்லை. இதனால் அவருக்கு பதிலாக தாஹிரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று மாற்றம்

இன்று மாற்றம்

இன்றைய போட்டியில் சாம் கரன் அல்லது இம்ரான் தாஹிர் இருவரில் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். சாம் கரன் நீக்கப்படவில்லை என்றால் பிராவோவை நீக்கிவிட்டு அவரின் இடத்தில இம்ரான் தாஹிர் ஆடுவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:19 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
IPL 2020: Will Imran Tahir play for CSK today against SRH?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+