Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன செய்வதென்றே தெரியவில்லை.. பாதியில் வெளியேறிய ரசல்.. சிக்கிய தினேஷ் கார்த்திக்.. என்ன நடந்தது?

துபாய்: கொல்கத்தா அணியின் முக்கியமான வீரர் ஆண்ட்ரு ரசல் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம்தான் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி அபுதாபியில் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா 6 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதன்பின் பஞ்சாப்பை கடைசி ஓவரில் கட்டுப்படுத்தி கொல்கத்தா அதிரடியாக வென்றது.

இந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் தற்போது கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கு சிக்கலாகி உள்ளது.

கேப்டன் தினேஷ் கார்த்திக்

கேப்டன் தினேஷ் கார்த்திக்

இந்த போட்டியில் கொல்கத்தா பவுலிங் செய்த இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் கே. எல் ராகுல் டீப் மிட் விக்கெட் திசையில் பந்தை அடித்தார். இதை கொல்கத்தா வீரர் ஆண்ட்ரு ரசல் பிடிக்கலாம் என்று வேகமாக ஓடினார். ஆனால் அவரால் அந்த பந்தை கேட்ச் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்த பந்தை பவுண்டரி செல்லாமல் தடுக்க முயன்றார்.

ரஸல் விழுந்தார்

ரஸல் விழுந்தார்

ஆனால் அந்த பந்தை ரசலால் தடுக்க முடியவில்லை. அதே சமயம் அவர் ஓடிய வேகத்தில், வேகமாக சென்று பவுண்டரி தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இவரின் காலில் அப்போது பலத்த காயம் ஏற்பட்டது. பவுண்டரி தடுப்பில் வேகமாக மோதியதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இந்த நிலையில் அவர் வலியால் துடித்தார். நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கீழேயே விழுந்து கஷ்டப்பட்டார். அதன்பின் அவரை சக வீரர்கள் வந்து தூக்கியபடி அழைத்து சென்றனர்.

தகவல்

தகவல்

இவருக்கு காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் ரசல் குறித்து தற்போது தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரசல் காலில் ஏற்பட்ட காயம் அச்சம் அளிக்கிறது. அவருக்கு ஏதாவது நடக்கும் என்று யோசித்து பார்த்தால் கூட எனக்கு அது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மிகவும் முக்கியமான வீரர்.

வீரர் யார்?

வீரர் யார்?

கொல்கத்தா அணிக்கு ரஸல் மிகவும் ஸ்பெஷல் பிளேயர்.அவர் இல்லை என்றால் அது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய கஷ்டமான விஷயமாக மாறும். அவரை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.

காயம் ஏற்பட்டது

காயம் ஏற்பட்டது

அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை பார்த்த போது எனக்கு இதயமே வெளியே வந்துவிட்டது. அவ்வளவு அதிர்ச்சியாக எனக்கு இருந்தது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரை மருத்துவர்கள் சோதனை செய்து வருகிறார்கள். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை உள்ளது என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

வருவாரா?

வருவாரா?

இந்த நிலையில் ரசல் இன்று நடக்கும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ரசல் இன்று ஆட வாய்ப்பு குறைவு என்று கூறுகிறார்கள்.அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை . களத்திற்கு வர 50% வாய்ப்புகள் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:48 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+