Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பான பவுலிங் ஆக்சன்.. பிசிசிஐக்கு பறந்த கடிதம்.. பயிற்சிக்கு கூட வராத சுனில் நரேன்.. மாட்டும் KKR!

துபாய்: கொல்கத்தா அணியின் மூத்த வீரர் சுனில் நரேன் இன்று பெங்களூருக்கு எதிராக நடக்கும் போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான் என்று தகவல்கள் வருகிறது.

நேற்று முதல்நாள் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரேன் போட்ட பவுலிங் ஐசிசி விதிகளுக்கு எதிராக இருப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிகளை மீறி நேற்று சுனில் நரேன் பவுலிங் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

களத்தில் இருந்த நடுவர் சுனில் நரேன் பவுலிங்கை பார்த்துவிட்டு இந்த புகாரை அளித்து இருக்கிறார். இதனால் ஐபிஎல் நிர்வாகம் சுனில் நரேனுக்கு தற்போது வார்னிங் கடிதம் அனுப்பி உள்ளது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

அதாவது ஒரு பவுலர் இப்படி எல்லாம் பவுலிங் செய்யலாம் என்று ஐசிசி அனுமதி அளித்துள்ளது. இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டு கையை வளைத்து பவுலிங் செய்வது, த்ரோ பால் செய்வது தவறு என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளை சுனில் நரேன் மீறியதால் இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது. கள நடுவர்கள் மூலம் பிசிசிஐக்கு இது தொடர்பாக கடிதம் பறந்துள்ளது.

விளக்கம் தந்தது

விளக்கம் தந்தது

சுனில் நரேனுக்கு எதிராக வைக்கப்பட்டு இருக்கும் இந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ள கொல்கத்தா அணி நிர்வாகம் , இந்த புகார் ஆச்சர்யம் அளிக்கிறது. ஐபிஎல்லில் இத்தனை போட்டிகள் விளையாடிய பின் சுனில் நரேன் மீது வைக்கும் புகாரை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அவருக்கு எதிராக இதே போல் முன்பும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

தவறு இல்லை

தவறு இல்லை

அப்போதெல்லாம் தன் மீது தவறு இல்லை என்பதை சுனில் நரேன் நிரூபித்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது மீண்டும் அவர் மீது இதே புகாரை வைப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனைகள் காரணமாக நேற்று முழுக்க சுனில் நரேன் பயிற்சி செய்ய களத்திற்கு வரவே இல்லை.

இன்றும் இல்லை

இன்றும் இல்லை

இன்றும் இந்த புகார் குறித்த சோதனைக்காக அவர் பயிற்சி செய்ய வரவில்லை. இதனால் இன்றைய போட்டியில் சுனில் நரேன் ஆடுவாரா என்று சந்தேகம் வந்துள்ளது. இன்று பெரும்பாலும் சுனில் நரேன் ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை என்றுதான் கூறுகிறார்கள். இவருக்கு தற்போது முதல் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இவர் சரியாக பவுலிங் செய்ய வேண்டும்.

தடை

தடை

இவர் இரண்டாவது வார்னிங் பெற்றால் இந்த தொடரில் மேற்கொண்டு விளையாட அனுமதிக்கப்பட மாட்டார். இவர் தடை செய்யப்படுவார். இது கொல்கத்தா அணிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணியில் ஆண்ட்ரு ரசல் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.இதனால் இன்று ரசல் ஆடுவாரா என்று சந்தேகம் நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது சுனில் நரேன் ஆடுவதும் சந்தேகம் ஆகியுள்ளது.

Story first published: Wednesday, October 14, 2020, 20:55 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+