Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபர ஐபிஎல்-லுக்கு நடுவே வந்த நல்ல செய்தி.. வாழ்த்துக்கள் ஜாகிர் கான்!!

அபுதாபி : முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் தன் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாகிர் கான் மற்றும் அவரது மனைவி சகாரிகா கட்கே ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து உள்ளனர்.

இந்த நிலையில், சகாரிகா கர்ப்பமாக உள்ளதாக ஜாகிர் கானுக்கு நெருக்கமான வட்டாரம் உறுதிப்படுத்தி உள்ளது.

ஜாகிர் கான் திருமணம்

ஜாகிர் கான் திருமணம்

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக விளங்கிய ஜாகிர் கான் ஓய்வுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் 2017இல் சகாரிகா கட்கே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், ஜாகிர் கான், தன் மனைவியுடன் அங்கே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். மறுபுறம் பரபரப்பான ஐபிஎல் தொடரில் மும்பை அணி வெற்றிகளை குவித்து வந்தது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

கடந்த வாரம் ஜாகிர் கான் தன் பிறந்த நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஜாகிர் கானை புகழ்ந்திருந்தார். சச்சின் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறி இருந்தனர்.

நல்ல செய்தி

நல்ல செய்தி

அந்த மகிழ்ச்சியான தருணங்களை தொடர்ந்து மற்றொரு நல்ல செய்தியும் கசிந்துள்ளது. ஜாகிர் கான் - சகாரிகா தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாகவும், பெற்றோராக உள்ளதாகவும் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

உறுதிப்படுத்தவில்லை

உறுதிப்படுத்தவில்லை

ஜாகிர் கான் இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை. எனினும், மும்பையில் அவரது நட்பு வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ஜாகிர் கான் இந்த அறிவிப்பை வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

கோலி - அனுஷ்கா

கோலி - அனுஷ்கா

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி தாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களைத் தொடர்ந்து ஜாகிர் கான் - சகாரிகா ஜோடியும் அந்த நல்ல செய்தியை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 20:55 [IST]
Other articles published on Oct 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+