Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னைக்கி போட்டியில பெரிய ஸ்டெப்பை எடுத்து வைக்கப் போறோம்... இயான் மார்கன் நம்பிக்கை!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 21வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Recommended Video

IPL 2021: இன்று முதல் New Venue..New Pitch..இனிதான் ஆட்டம் ஆரம்பம் | Oneindia Tamil

இந்த தொடரின் முதல் போட்டியான இது அகமதாபாத்தில் நடைபெறும் நிலையில் கடந்த போட்டியின் வெற்றியை தொடர பஞ்சாப் கிங்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கேகேஆர் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

21வது போட்டி

21வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 21வது போட்டியில் கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்

வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்

கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நடப்பு சாம்பியனுடனான அந்த போட்டியின் வெற்றி பஞ்சாப் அணக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

இதையடுத்து அந்த தன்னம்பிக்கையுடன் இன்றைய போட்டியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டு வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.

பஞ்சாப் அணியில் ஜோர்டன் சேர்ப்பு

பஞ்சாப் அணியில் ஜோர்டன் சேர்ப்பு

அணியின் துவக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பேட்டிங்கை துவக்கினர். இதனிடையே, அணியின் முக்கிய வீரர்களை துவக்கத்திலேயே அவுட் செய்ய கேகேஆர் தீவிரம் காட்டி வருகிறது. இன்றைய போட்டியில் அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பேபியன் ஆலனுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெற்றி குறித்து இயான் நம்பிக்கை

வெற்றி குறித்து இயான் நம்பிக்கை

இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் டாசின்போது பேசிய கேகேஆர் அணியின் இயான் மார்கன், சிறப்பான அணி வீரர்களுடன் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாகவும் சிறப்பான வெற்றியை கேகேஆர் இன்றைய போட்டியில் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 26, 2021, 20:34 [IST]
Other articles published on Apr 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+