Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க 3 பேருக்கும் டாட்டா பைபை.. யாருமே சீண்ட மாட்டார்கள்.. ஐபிஎல் வீரர்களுக்கு நேர்ந்த கதி!

மும்பை : 2021 ஐபிஎல் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணியை சீரமைத்து வருகின்றன.

பார்ம் இழந்த வீரர்கள், தங்கள் அணிக்கு ஒத்து வராத வீரர்கள், காயமடைந்தவர்கள் என பலரை அணிகள் நீக்கி உள்ளன.

ஐபிஎல் மினி ஏலமும் பிப்ரவரி 18 அன்று நடைபெற உள்ளது. அப்போது நீக்கப்பட்ட வீரர்கள் அதில் பங்கேற்பர்.

மூன்று வீரர்கள்

மூன்று வீரர்கள்

அப்படி கடந்த சீசனில் பல கோடிகளுக்கு வாங்கப்பட்டு, தற்போது நீக்கப்பட்டு இருக்கும் மூன்று வீரர்கள், 2021 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்பட மாட்டார்கள் என கூறப்படுகிறது. அந்த மூன்று வீரர்களும் அந்த பரிதாப நிலையை அடைந்துள்ளனர்.

யார் அந்த வீரர்கள்?

யார் அந்த வீரர்கள்?

அந்த மூன்று வீரர்கள் கிறிஸ் மோரிஸ், ஷெல்டன் காட்ரேல் மற்றும் கேதார் ஜாதவ். இந்த மூன்று வீரர்களும் கடந்த ஆண்டுகளில் தங்கள் அணிகளிடம் இருந்து பல கோடிகளை சம்பளமாக பெற்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ் மோரிஸ்

கிறிஸ் மோரிஸ்

கிறிஸ் மோரிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று ஆடி வந்தார். ஆல்-ரவுண்டரான அவரது செயல்பாட்டில் பெரிய குறை ஒன்றும் இல்லை. ஆனால், அவர் ஐபிஎல் தொடர் முடிந்ததில் இருந்து உடற்தகுதி இல்லாததால் கிரிக்கெட் ஆடவில்லை. அதனால் அவர் நீக்கப்பட்டார். அவரை ஏலத்தில் எந்த அணியும் வாங்காது.

ஷெல்டன் காட்ரேல்

ஷெல்டன் காட்ரேல்

அடுத்ததாக கடந்த ஆண்டு ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 8.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஷெல்டன் காட்ரேல், மோசமான பந்துவீச்சின் காரணமாக அதிரடியாக நீக்கப்பட்டார். அவரை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வராது என கருதப்படுகிறது.

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்

கடைசியாக சிஎஸ்கே அணியால் நீக்கப்பட்ட கேதார் ஜாதவ்வும் இந்த சீசனில் எந்த அணியாலும் வாங்கப்பட மாட்டார் என கருதப்படுகிறது. கடந்த மூன்று சீசன்களில் அவரது சம்பளம் 7.6 கோடி ஆகும். அவர் மோசமான பார்மில் இருப்பதோடு, உடற்தகுதியும் சீராக இல்லை என்பதால் அவரை எந்த வாங்க முன் வராது.

Story first published: Thursday, January 28, 2021, 13:28 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+