Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை அணிக்கு சிக்கல்.... ஹசல்வுட் இடத்தை நிரப்ப வாய்ப்பிருக்கும் 5 வீரர்கள்... யாருக்கு வாய்ப்பு!

மும்பை: ஹசல்வுட்டுக்கு மாற்றாக சென்னை அணி வாங்க வாய்ப்பிருக்கும் 5 வீரர்கள் கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்தாண்டு ஐபிஎல்-ல் கம்பேக் கொடுப்பதற்காக சென்னை அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ஆனால் இன்று முக்கிய பவுலரான ஹசல்வுட் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாற்று வீரர் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என அணி நிர்வாகம் கூறியுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக சென்னை அணி எந்த வீரரை வாங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தாமஸ்

தாமஸ்

மேற்கிந்திய வீரரான ஒசானா தாமஸ் கடந்த 2018ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார். டி20 போட்டிகளில் தற்போது மிகவும் பேசப்படும் வீரராக உள்ளர். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 14 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் பந்துவீசியுள்ள அவர் 18 விக்கெட்களை எடுத்துள்ளார். ஐபிஎல்-ம் இதுவரை ராஜஸ்தான் அணிக்காக இவர் 4 போட்டிகளில் மட்டும் ஆடி 5 விக்கெட்களை எடுத்தார். எனவே சி.எஸ்.கே அணி வாய்ப்பு கொடுத்தால் இவருக்கு நல்ல பவுலர் அந்த அணிக்கு கிடைக்கலாம்.

ஷெல்டன்

ஷெல்டன்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் கார்ட்டலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 30 டி20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதே போல ஐபிஎல்-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய அவர் 6 போட்டிகளில் 6 விக்கெட்களை எடுத்தார். கடந்த முறை ராஜஸ்தான் வீரர் ராகுல் தேவட்டியா, இவரது ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசியதால் அதன் பின்னர் உட்கார வைக்கப்பட்டார். ஒருவேளை இந்த சீசனில் தோனியின் கீழ் விளையாடினால், ஷெல்டனுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.

 சௌத்தி

சௌத்தி

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான டிம் சௌத்தி, டெப்த் ஓவர்களில் பந்துவீசுவதில் மிகச்சிறப்பானவர். நியூசிலாந்து அணிக்காக இதுவரை 81 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 96 விக்கெட்களை கைப்பற்றிய அனுபவ வீரர் ஆவார். அவரின் எகனாமி ரேட் 8.39 ரன்கள் ஆகும். இவருக்கு ஐபிஎல்-ம் 40 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. எனவே இவரை போன்ற டாப் கிளாஸ் பவுலரை சி.எஸ்.கே தேர்வு செய்தால் அந்த அணியின் பவுலிங் நிச்சயம் வலுப்பெறும்.

வில்லி

வில்லி

இங்கிலாந்து அணியை சேர்ந்த டேவிட் வில்லி, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மட்டுமின்றி பேட்டிங்கிலும் உதவக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார். நியூசிலாந்து அணிக்காக 28 டி20 போட்டிகளில் பந்துவீசியுள்ள இவர் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல்-ல் இவர் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு 2 விக்கெட்களை மட்டுமே எடுத்தார். இவரை மீண்டும் சென்னை அணி எடுத்துக்கொண்டால் பவுலிங் மட்டுமின்றி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கூட உதவுவார் எனக்கூறப்படுகிறது.

ரஷித்

ரஷித்

இங்கிலாந்து அணியை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித். சி.எஸ்.கே, ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் அணியாகும். எனவே உலகத்தரம் வாய்ந்த அடில் ரஷித் சென்னை அணிக்கு நல்ல தேர்வாக இருக்கலாம். இதுவரை 57 சர்வதேச டி20 களில் ஆடியுள்ள அடில் ரஷித் 55 விக்கெட்களை எடுத்துள்ளார். இவரின் எகனாமி வெறும் 7.55 ரன்கள் தான். தோனி ஸ்பின் பவுலர்களை திறம்பட கையாள்வார் என்பதால் இவர் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.

Story first published: Friday, April 2, 2021, 11:17 [IST]
Other articles published on Apr 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+