Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பைக்கு தயாராகறதுக்கு ஐபிஎல் நல்ல வாய்ப்பா அமையும்... பேர்ஸ்டோ நம்பிக்கை

புனே : இன்னும் சில தினங்களில் ஐபிஎல் 2021 தொடர் துவங்கவுள்ள நிலையில் இந்த சீசனில் எஸ்ஆர்எச் அணிக்காக விளையாடவுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ.

வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், முன்னதாக ஐபிஎல் தொடர் அதை எதிர்கொள்ள சிறப்பான வாய்ப்பாக அமையும் என்று பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

மனதளவிலும் உடலளவிலும் டி20 உலக கோப்பை போட்டிக்கு தயாராக ஐபிஎல் நல்லமுறையில் பலனளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

தற்போது இந்தியா -இங்கிலாந்து ஒருநாள் தொடரில் பேர்ஸ்டோ பங்கேற்று விளையாடி வருகிறார். இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக 66 பந்துகளில் 94 ரன்களை அடித்துள்ளார். ஆயினும் இங்கிலாந்து அணி 66 ரன்களில் இந்தியாவிடம் தோல்வி கண்டுள்ளது.

எஸ்ஆர்எச் அணியில் பேர்ஸ்டோ

எஸ்ஆர்எச் அணியில் பேர்ஸ்டோ

இதையடுத்து ஐபிஎல் 2021 தொடரிலும் பங்கேற்று ஆடவுள்ளார் பேர்ஸ்டோ. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இந்த சீசனில் அவர் விளையாடவுள்ளார். இந்நிலையில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்காக சரியாக தயார்படுத்திக் கொள்ள ஐபிஎல் போட்டிகள் சிறப்பான வாய்ப்பாக அமையும் என்று பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

டி20 உலககோப்பைக்கு உதவும்

டி20 உலககோப்பைக்கு உதவும்

மனதளவிலும் உடலளவிலும் வீரர்கள் டி20 உலக போட்டிக்காக தயார்படுத்திக் கொள்ள ஐபிஎல் போட்டிகள் உதவும் என்றும் ஐபிஎல்லிற்காக இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விளையாடவுள்ள நிலையில், டி20 உலக கோப்பை தொடரில் அந்த அனுபவம் சிறப்பாக கைகொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான செயல்பாடு வேண்டும்

சிறப்பான செயல்பாடு வேண்டும்

ஆயினும் ஐபிஎல் போட்டிகளின் தரம் மற்றும் எதிரணியினரின் தரம் குறித்து அறிந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டி20 உலக கோப்பைக்கு சிறப்பாக தயாராக முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 25, 2021, 17:34 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+