என்னையா டீமை விட்டு தூக்குனீங்க? வெறியாட்டம் ஆடிய ஆஸி. வீரர்.. அதிரடி செஞ்சுரி!
அடிலெய்டு : 2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார் அலெக்ஸ் கேரி.
அவருக்கு அதிக வாய்ப்பு அளிக்காத நிலையில் அவரை 2021 ஐபிஎல் ஏலத்துக்கு முன் அணியில் இருந்து நீக்கி உள்ளது டெல்லி கேபிடல்ஸ்.
அவர் தன்னை விடுவித்த அடுத்த சில மணி நேரங்களில் சதம் அடித்து அதிர வைத்துள்ளார்.

அலெக்ஸ் கேரி
அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். 2019 உலகக்கோப்பை தொடரில் தனி ஆளாக சில போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் இன்னும் மறக்க முடியாதவை. அதன் பின் அவர் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும் அதிரடி பேட்ஸ்மேன் என்ற அடையாளத்தை அவர் தொடர்ந்து வருகிறார்.

நீக்கம்
2020 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவர் இடம் பெற்றார். அவருக்கு ஏற்ற இடம் அணியில் இல்லாததால் அவருக்கு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் பெரிதாக சோபிக்காத நிலையில் அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளது அந்த அணி.

அதிரடி சதம்
இந்த நிலையில், அவர் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார். இந்த பிக் பாஷ் சீசனின் முதல் சதம் இதுதான். கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற அவர் 62 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.

அணிகள் போட்டி போடுமா?
அலெக்ஸ் கேரி தற்போது ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில் அவரை வாங்க மற்ற ஐபிஎல் அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் தோனிக்கு பின் சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லை என்பதால் அவர்களும் அலெக்ஸ் கேரியை வாங்க போட்டி போடலாம்.


Click it and Unblock the Notifications