Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போடு தகிட தகிட.. அமீரகத்தில் ஐபிஎல் "கன்ஃபார்ம்" - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் 2021 தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் - அக்டோபரில் அமீரகத்தில் நடக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே கடந்த மே.25 செய்தி வெளியிட்டது.

இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

தேதிகள் குளறுபடி

தேதிகள் குளறுபடி

எனினும், ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதிகளில் தொடர்ந்து குளறுபடி நீடிக்கிறது. ஏபிபி-யின் டெலிகிராஃப் தளம் வெளியிட்ட செய்தியில், "ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 அல்லாதது 19ன் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது. ஸ்போர்ட்ஸ் டுடே செப்.19 அல்லது செப்.20 தொடங்கும் என்று கூறியிருந்த நிலையில், டெலிகிராஃப் செப்.18 அல்லது 19ம் தேதி தொடங்கும் என்று கூறியது.

வார இறுதியிலா?

வார இறுதியிலா?

இதில், டெலிகிராஃப் ரிப்போர்ட் படி போட்டிகள் தொடங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஏனெனில், செப்.18 சனிக்கிழமை. ஒருவேளை அன்றைய தினம் தொடங்கப்படலாம். அல்லது மறுநாளான செப்.20 ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படலாம். நிறுத்தப்பட்ட தொடர், மீண்டும் தொடங்கும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு பழையபடியே இருக்க வேண்டுமெனில், வார இறுதியில் தொடரை தொடங்குவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுவதே அதன் காரணம் என்று கூறப்பட்டது.

31 போட்டிகளும்

31 போட்டிகளும்

இந்நிலையில், இன்று பிசிசிஐ சார்பில் நடந்து வரும் "SGM" மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் டூ அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று வெளியாகுமா?

இன்று வெளியாகுமா?

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் நடப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

Story first published: Saturday, May 29, 2021, 14:25 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+