Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல்வேறு வியூகங்கள்..பல்வேறு மாற்றங்கள்..நாளை ஐபிஎல் ஏலம் குறித்து நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை

சென்னை: 14வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடைபெறவுள்ள சூழலில் அதற்காக பல்வேறு வியூகங்களுடன் அணிகள் களமிறங்குகின்றன.

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் கொரோனா காரணமாக அயல்நாட்டில் நடந்த நிலையில் 14வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெறும் என தெரிகிறது.

அதற்கான வீரர்களின் மினி ஏலம் நாளை மதியம் 3 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் நடைபெறுகிறது. இதிலுள்ள சுவாரஸ்ய விஷயங்கள் மற்றும் அணிகளின் வியூகங்களை பார்க்கலாம்

எண்ணிக்கை

எண்ணிக்கை

ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 292 வீரர்கள் ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 164 பேர் இந்திய வீரர்கள் ஆவர். மேலும் 64 பழைய வீரர்களும், 227 அறிமுக வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.

ஸ்டார் ப்ளேயர்ஸ்

ஸ்டார் ப்ளேயர்ஸ்

நாளைய ஏலத்தில் ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய நட்சத்திர வீரர்களும் ஏலம் விடப்படுகின்றனர். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ், சகிப் அல் ஹசன் டி20 பேட்ஸ்மேன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டேவிட் மாலன் ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

 பெரும் மாற்றம்

பெரும் மாற்றம்

8 அணிகளில் பஞ்சாப் அணி மட்டும் 9 வீரர்கள் வெளியேற்றியுள்ளதால் அவ்வணியின் கையிருப்பு தொகை ரூ.53.2 கோடி உள்ளது. இதனால் பஞ்சாப் அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த மாற்றம்

குறைந்த மாற்றம்

8 அணிகளில் கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மட்டும் தலா ரூ.10.75 கோடி மட்டுமே கையிருப்பு வைத்துள்ளது. இதனால் இந்த அணிகள் பெரிய அளவில் ஏலத்தில் ஜொலிக்க வாய்ப்பில்லை.

தேவைப்படும் வீரர்கள்

தேவைப்படும் வீரர்கள்

பஞ்சாப் அணியில் 9 வீரர்கள், பெங்களூருவில் 11 வீரர்கள், மும்பையில் 7, சென்னையில் 6, ராஜஸ்தானில் 9, கொல்கத்தாவில் 8, ஐதராபாத் 3, டெல்லி 8 வீரர்களின் இடங்கள் காலியாக உள்ளது.

Story first published: Thursday, February 18, 2021, 8:38 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+