"அவரு 2 தரம்.. இவரு 3 தரம்".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க!
டெல்லி : ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் சிறிய அளவில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ முன்னதாக அறிவித்துள்ளது.
வரும் 17ம் தேதி சென்னையில் இந்தியா -இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த நாளில் ஐபிஎல் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கம் போல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுமா அல்லது கடந்த ஆண்டு போல யூஏஇயில் நடத்தப்படுமா என்பது குறித்து பிசிசிஐ வரும் வாரங்களில் இறுதி முடிவு எடுக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலம் சிறிய அளவில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த ஏலம் எந்த இடத்தில் மற்றும் எந்த தேதியில் நடைபெறும் என்று தற்போது பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஏலம் வரும் 18ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17ம் தேதி முடிவடையவுள்ள நிலையில், அடுத்த நாள் இந்த ஏலம் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications