Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்கள் டீமை அனுமதிக்க முடியாது.. முக்கிய மாநிலத்திற்கு ஐபிஎல் போட்ட "கேட்".. வீணாய் போன பிளான்!

டெல்லி: 2021ல் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கான திட்டங்கள் இப்போதே தீவிரமாக நடந்து வருகிறது. இதில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளன.

ஐபிஎல் 2020 தொடர் மிகப்பெரிய வெற்றி தொடராக அமைந்தது. உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்கான திட்டங்களை வகுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் இறுதியில் பிசிசிஐ அமைப்பு சார்பாக நடக்க உள்ள கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

 புதிய அணிகள்

புதிய அணிகள்

இதில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்காக பல்வேறு மாநிலங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை, கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் போர்டுக்கு இருக்கும் வலிமை, எந்த மாநிலத்தில் அணியை வாங்க கோடீஸ்வரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நிறைய விஷயங்களை பிசிசிஐ இதற்காக ஆலோசனை செய்து வருகிறது.

ஆலோசனை

ஆலோசனை

இந்த நிலையில் கேரளா, குஜராத், உத்தர பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள் இதற்கான பரிந்துரையில் உள்ளது. இதில் குஜராத் ஐபிஎல் அணி உருவாக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. கேரளா ஐபிஎல் அணியை வாங்க மோகன்லால் தயாராக இருக்கிறார். கேரளா அணி உருவாக்குவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் அசாம் சார்பாக கவுகாத்தி அணியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அசாமில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் . வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதியாக அசாம் இருக்கும் என்று அந்த மாநில கிரிக்கெட் போர்ட் காரணமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

பிசிசிஐ

பிசிசிஐ

ஆனால் கவுகாத்தி ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ஏன் இந்த அணியை உருவாக்கி பிசிசிஐ மறுத்தது என்று முழு விவரம் தெரியவில்லை. ஆனால் கவுகாத்தி அணியை வாங்க யாரும் தயாராக இல்லை என்று கூறுகிறார்கள். இதன் காரணமாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, December 21, 2020, 17:28 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+