Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 WorldCup : இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் உறுதி..பொறுமை இழந்த பிசிசிஐ.. முக்கிய வீரருக்கு ஆப்பு

அமீரகம்: டி20 உலகக்கோப்பைகான இந்திய அணியில் ஒரு வீரர் மாற்றப்படுவது உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 2வது பகுதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுகள் வரும் அக்டோபர் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த முறை அதிகளவில் புதுமுக வீரர்களும் இளம் வீரர்களும் அசத்தி வருகின்றனர். ஆனால் முன்னணி வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

புதிய தலைவலி

புதிய தலைவலி

இதில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது தான், பிசிசிஐ-க்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது பெரும் பிரச்னையாக இருக்கிறது,

கவலைப்படாத பிசிசிஐ

கவலைப்படாத பிசிசிஐ

இது ஒருபுறம் இருக்க, சீனியர் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி போன்றவர்களும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருவதும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்கள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனினும் சீனியர் வீரர்கள் பலரும் பார்முக்கு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அணித் தேர்வாளர்கள் இருக்கிறார்கள். இதனால், இவர்களை நீக்க வாய்ப்பே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை ஆல்ரவுண்டர் இல்லை

மும்பை ஆல்ரவுண்டர் இல்லை

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை நீக்குவது மட்டும் உறுதி என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் இன்னும் பந்துவீசாமல் இருந்து வருகிறார். பேட்டிங்கிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் உதவுவார், லோயர் ஆர்டரில் இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என்பதால் தான் அவரை அணியில் சேர்த்தனர்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

ஐபிஎல் தொடரில் பந்துவீசாமல் இருந்த பாண்ட்யா, டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் பந்துவீசுவார் என்று கூறியதால் தான் அணிக்குள் எடுத்தனர். ஆனால் தற்போது உடற்தகுதி சரியில்லாததால் பந்துவீசாமல் இருந்து வருகிறார். இது பிசிசிஐ-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரை நீக்கிவிட்டு, புதிதாக வேறு ஒரு ஆல்ரவுண்டரை இணைக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

ஹர்திக்கிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அல்லது வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஷர்துல் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதே போல பேட்டிங்கும் நன்றாக செய்கிறார். இதே போல கேகேஆர் வீரர் வெங்கடேஷ் ஐயரும் பந்துவீச்சு, பேட்டிங் என அதிரடி காட்டி வருகிறார். எனவே அவர்கள் இருவரில் யாரோ ஒருவரை கொண்டு வர வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, October 5, 2021, 22:06 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+