கடைசி நேரத்தில் காலை வாரிய முக்கிய வீரர்.. கொல்கத்தா அணிக்கு பெரும் இடி.. ப்ளே ஆஃப்-ல் பின்னடைவு!
அமீரகம்: ப்ளே ஆஃப் சுற்று நடைபெறவுள்ள சூழலில் கொல்கத்தா அணியின் மிக முக்கிய வீரர் திடீரென ஐபிஎல்-ல் இருந்து வெளியேறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில் ப்ளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.
லீக் சுற்றின் முடிவில் டாப் இடங்களை பிடித்த சிஎஸ்கே, டெல்லி, ஆர்சிபி, கொல்கத்தா என 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ப்ளே ஆஃப் போட்டிகள்
இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று முதலாவது குவாலிஃபையர் போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்த பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோத இருக்கின்றனர்.
எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபயர் 1ல் தோல்வி அடையும் அணியுடன் குவாலிபயர் 2-வது போட்டியில் மோதும்.

முக்கிய வீரர் இல்லை
இந்நிலையில் இப்படிபட்ட முக்கியமான காலக்கட்டதில் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் சகிப் அல் ஹசன் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். ஏற்கனவே கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் அணியில் இணைக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரும் வெளியேறியிருக்கிறார்.

என்ன காரணம்
ஐபிஎல் தொடர் முடிவடைந்த 2 நாட்களில் (அக்.17) டி20 உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. முதலில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஓமனில் நடைபெறுகின்றன. அந்தவகையில் வங்கதேச அணி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்காத காரணத்தினால் தகுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்று தான் வரவேண்டும். எனவே அதற்கான அழைப்பு வந்துவிட்டதால் சகிப் அல் ஹசன் அங்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னடைவு
ஆண்ட்ரே ரஸல் காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது சகிப் அல் ஹசனும் இல்லை. எனவே இவர்களுக்கு பதிலாக எந்த வீரரை அணியில் சேர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications