Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவில்லியர்ஸே கடுப்பாகிட்டாரே... அசால்டாக நின்ற சஹால்.. அதிரடி வீரரின் விக்கெட்டில் இப்படி இருப்பதா?

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சஹால் செய்த தவறால் டிவில்லியர்ஸே அதிருப்தியடைந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் மலமலவென ஸ்கோர் உயர்ந்து வருகிறது.

தொடக்கம்

தொடக்கம்

டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் ருத்ராஜ் கெயிக்வாட், டுப்ளசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இன்றி 51 ரன்கள் எடுத்தது.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

ஆனால் இந்த ஜோடியை பிரிக்க முயன்ற கோலிக்கு 10 ஓவரில் தான் வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக ஆடி வந்த ருத்ராஜ் கெயிக்வாட் 33 ரன்களுக்கு சஹார் பந்துவீச்சில் அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேர்த்தது. மொயின் அலி காயம் காரணமாக அணியில் இடம்பெறாததால் 2வது விக்கெட்டிற்கு சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.

 டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்

யுவேந்திர சஹார் வீசிய ஓவரில் தனது முதல் பந்தை சந்தித்த ரெய்னா அடித்த பந்து ஸ்டம்பிற்கு சற்று அருகிலேயே விழுந்தது. இதனையடுத்து ரெய்னா சிங்கிள் எடுக்க முயன்றார். அப்போது வேகமாக செயல்பட்ட ஆர்சிபி கீப்பர் டிவில்லியர்ஸ் உடனடியாக அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருக்கும் ஸ்டம்ப்பிற்கு வீசினார். ஆனால் மறுமுனையில் நின்று அவுட் செய்ய வேண்டிய சஹால் ஸ்டம்பிற்கு அருகில் வரவில்லை.

தவறிய வாய்ப்பு

தவறிய வாய்ப்பு

சஹால் மட்டும் ஸ்டம்பிற்கு அருகில் உடனே சென்றிருந்தால் சுரேஷ் ரெய்னா அவுட்டாகியிருப்பார். இதனால் கோபமடைந்த டிவில்லியர்ஸ் ஏன் ஸ்டம்பிற்கு அருகில் செல்லவில்லை என்பது போல் சஹால் மீது அதிருப்தி அடைந்தார். அதிரடி வீரராக பார்க்கப்படும் ரெய்னாவை விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைத்தபோதும் சஹாலின் தவறால் அது பறிபோனது.

Story first published: Sunday, April 25, 2021, 20:54 [IST]
Other articles published on Apr 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+