Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம் கரணுக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸின் இளம் புயல்.. அசர வைக்கும் ஃபார்ம்.. வளைத்துப்போட்ட சிஎஸ்கே!

அமீரகம்: சிஎஸ்கே அணியில் சாம் கரணுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் களமிறக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Sam Curran-க்கு மாற்றாக CSK-வுக்கு கொண்டுவரப்பட்ட Dominic Drakes

14வது ஐபிஎல் தொடைரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றாலும் கடந்த 2 போட்டிகளில் தொடர் தோல்விகளை பெற்றுள்ளது.

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு அதிர்ச்சியாக அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

திடீர் விலகல்

திடீர் விலகல்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது சாம் கரணுக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருப்பினும் காயம் விரைந்து குணமடைய வாய்ப்பில்லை என்ற காரணத்தினால், ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், எதிர்பாராத விதமாக விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்தும் விலகவுள்ளேன். இந்த முறை நிச்சயம் சிஎஸ்கே கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது எனத்தெரிவித்திருந்தார்.

சாம் கரணுக்கு மாற்று

சாம் கரணுக்கு மாற்று

சிஎஸ்கே அணியின் கீ ப்ளேயராக சாம் கரண் இருந்தார். எனவே அவருக்கு மாற்றாக ஒரு வீரரை களமிறக்க வேண்டிய சூழலுக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டது. பிசிசிஐ விதிமுறைப்படி, கடைசி லீக் போட்டிக்கு முன்புவரை மாற்று வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளலாம். அந்தவகையில் சாம் கரணுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.

இணைவதில் சிக்கல்?

இணைவதில் சிக்கல்?

டாம்னிக் ட்ரேக்ஸ் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக செயல்பட்டு வருகிறார். இவரும் தற்போது சிஎஸ்கே பயோ பபுளில்தான் இருக்கிறார் என்பதால் அணியில் இணைவதில் எந்தவொத தாமதமும் இருக்காது. இடதுகை வீரரான டாமினிக், அனுபவம் குறைந்த வீரராவார். ஆனால் இவரின் திறமை அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில் உள்ளது.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

சமீபத்தில் நடந்து முடிந்த கரிபியன் பிரீமியர் லீக் தொடரில், செய்ண்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய டாமினிக் ட்ரேக்ஸ் 16 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அந்த தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றியோர் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார். இதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பவர் ஹிட்டராக இருப்பதால் சிஎஸ்கே அணிக்கு நல்ல தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, October 7, 2021, 19:51 [IST]
Other articles published on Oct 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+