Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி மிஸ்ஸே ஆகாது..இளம் வீரர்களுக்கே டஃப் கொடுக்கும் ஃபிட்னஸ்..தோனியின் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

மும்பை: ஐபிஎல் தொடருக்கு இந்தாண்டு சூப்பர் ஃபிட்னஸுடன் எம்.எஸ்.தோனி களமிறங்கியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டி இன்று மும்பை நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றனர். கடந்த முறை தோனி சிறப்பாக விளையாடவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்தாண்டு தோனியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஆண்டு மிக மோசமான சீசனாக அமைந்தது. பொறுப்புடன் ஆடியிருக்க வேண்டிய எம்.எஸ்.தோனி தொடர் முழுவதையும் சேர்த்து 200 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் தோனிக்கு வயதாகிவிட்டது அவரெல்லாம் எது இனி ஐபிஎல் ஆட வருகிறார் என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கலங்கிய ரசிகர்கள்

கலங்கிய ரசிகர்கள்

அதற்கு ஏற்றார் போல் கடந்தாண்டு தோனியின் ஃபிட்னஸும் கடும் கேள்விகளை எதிர்கொண்டது. ஐதராபாத்திற்கு எதிரான போட்டியின் போது தோனி ரன் எடுக்க முடியாமல் கீழே குணிந்து பெரிதும் மூச்சு இளைத்ததை ரசிகர்கள் யாராலும் இன்றைக்கும் மறக்க முடியாது. அப்போது ஆட முடியாமல் அவர் சிரமப்பட்டது அனைவரது மனதிலும் உருக்கத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று கடைசி ஓவரில் வெற்றிக்காக சிக்ஸர் அடிக்க முயன்று முடியாமல், ரன்களை ஓடி எடுத்த தோனி களைத்துப்போனது சென்னை ரசிகர்களை கலங்க வைத்தது.

கடின உழைப்பு

கடின உழைப்பு

இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றிலும் மாறாக புதிய ஃபிட்னஸுடன் களமிறங்கியுள்ளார் தோனி. மார்ச் மாதம் முதலே பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட அவர் பகலிலும், மாலை வேளைகளிலும் தீவிர பயிற்சி மேற்கொண்டதாக அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்.

ஃபிட்னஸ்

அதனை நிரூபிக்கும் வகையில் தோனியின் பயிற்சி வீடியோக்களையும் சிஎஸ்கே அணி வெளியிட்டு வந்தது. அந்த வகையில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பெவிலியனில் இருந்து களத்திற்குள் வரும் தோனி பயங்கர ஃபிட்னஸுடன் சிரித்த முகத்துடன் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்று ஆட்டத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது என உற்சாகத்துடன் உள்ளனர்.

Story first published: Saturday, April 10, 2021, 19:51 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+